செய்திகள் சில வரிகளில்...

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

விளாம்பட்டிக்கு கூடுதல் பஸ் தேவை

நிலக்கோட்டை: மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் அரசு விரைவு, டவுன்பஸ் போக்குவரத்து நடந்து வருகிறது. மதுரை மாவட்ட எல்லையான விளாம்பட்டி, மட்டப்பாறை, பகுதிகளில் இருந்தும் மதுரைக்கு விவசாயிகள் அடிக்கடி சென்று வருகின்றனர். சோழவந்தான், தேனூர், துவரிமான், மேலக்கால் கிராமங்களுக்கு விவசாயிகள் செல்ல வேண்டி இருப்பதால் பஸ்கள் அதிகமாக இயக்க வேண்டும். தற்போது காலை, மாலை இரு வேளை மட்டுமே ஒரு அரசு பஸ் வந்து செல்கிறது. கூடுதலாக பஸ் இயக்கினால் 15 கிராமங்கள் பயனடையும்.

தபால் ஊழியர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாரதிய போஸ்டல் எம்ப்ளாயீஸ் பெடரேசன்" சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தென் மண்டல செயலாளர் திருமலைசாமி தலைமை வகித்தார். செயலாளர் பாபுலால், கோட்ட செயலாளர் சுகுமார் பேசினர்.தபால்துறையை தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பஞ்சப்படியை உடனே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இடிபாடுகளை அகற்ற வலியுறுத்தல்

நிலக்கோட்டை: நிலக்கோட்டை பேரூராட்சி சார்பில் ஆறு மாதங்களுக்கு முன்பு பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் இடிக்கப்பட்டன. பஸ்கள் உள், வெளியேறும் வாயில், யூனியன் அலுவலகம் முன்பு இடிக்கப்பட்ட கழிவுகளை அகற்றாமல் விட்டுவிட்டனர். இதனால் பஸ் ஸ்டாண்ட் பகுதி அசுத்தமாக உள்ளது. தற்போது காற்று பலமாக வீசுவதால் புழுதி பறக்கிறது. யூனியன் அலுவலகம் முன்பாக கட்டட இடிபாடுகள் கழிவுகள் சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. பேரூராட்சி நிர்வாகம் கட்டட இடிபாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ் இயக்க வலியுறுத்தல்

இடையேகோட்டை: ஒட்டன்சத்திரத்திலிருந்து இடையகோட்டைக்கு அரசு டவுன்பஸ்கள், கரூர் வழித்தடங்களில் செல்லும் மொபசல் பஸ்கள் மேலும் திண்டுக்கல்லில் இருந்தும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து கடந்த வாரம் துவங்கியது. ஆனால் இடையகோட்டைக்கு இதுவரை எந்த பஸ்சும் இயக்கப்படவில்லை.

இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இடையகோட்டை முகமது இஸ்மாயில் கூறியதாவது: மருத்துவ பரிசோதனைக்கு ஒட்டன்சத்திரம் செல்ல வேண்டி உள்ளது. பஸ்சில் ரூ.20 செலவாகும் துாரத்திற்கு கார் வாடகையாக ரூ.500 ஆகிறது. எனவே பாமரர்களின் வசதிக்காக இடையகோட்டைக்கு பஸ்களை இயக்க வேண்டும், என்றார்.

பூட்டிக் கிடக்கும் ரேஷன் கடைகள்

கன்னிவாடி: ஊரடங்கால் தவிக்கும் மக்களுக்கு, டோக்கன் முறையில் ரேஷன் பொருட்களை அரசு இலவசமாக வழங்குகிறது. எடை குறைவு, வினியோகத்தில் சிலவற்றை தவிர்த்தல் போன்ற புகார்கள் நீடிக்கிறது. தற்போது, டோக்கன் முறையில் வினியோகிப்பதில் குளறுபடி தொடர்கிறது.

விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் சக்திவேல் கூறுகையில், ''ஆத்துார், திண்டுக்கல் மேற்கு தாலுகாக்களின் பல கடைகளில் டோக்கனில் குறித்த நாளில் திறப்பதில்லை. ஜூன் 5ல் வழங்க வேண்டிய டோக்கன்களுக்கு, 4 நாட்கள் கடந்தும் வழங்கவில்லை. பொருட்களை பதுக்குகின்றனர்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X