மதிப்பை விற்க மாட்டோம்: சீனாவுக்கு ஆஸி பிரதமர் கண்டனம்| 'Will not be intimidated by threats': Australian PM to China | Dinamalar

மதிப்பை விற்க மாட்டோம்: சீனாவுக்கு ஆஸி பிரதமர் கண்டனம்

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (14)
Share

சிட்னி: ''ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் சீனாவின் மிரட்டல் மற்றும் வற்புறுத்தலுக்காக, ஒருபோதும் எங்கள் மதிப்பை விற்க தயாராக இல்லை,'' என, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.latest tamil newsசீனா, - ஆஸ்திரேலியா இடையே, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலம், ஆண்டொண்றுக்கு, 18 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, வர்த்தகம் நடக்கிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து, மாட்டு இறைச்சி மற்றும் பார்லி ஆகியவற்றை, சீனா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.இந்நிலையில், 'கொரோனா' தொற்று விவகாரத்தில், சீனா அலட்சியமாக செயல்பட்டதால் தான், இன்று உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆஸ்திரேலியா சமீபத்தில் குற்றம்சாட்டியது.'இது தொடர்பாக, சர்வதேச விசாரணை தேவை' என, ஆஸ்திரேலிய அரசு வலியுறுத்தியது.

இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே, வர்த்தக போர் மூண்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து, மாட்டு இறைச்சி இறக்குமதிக்கு சீனா தடை விதித்தது. பார்லி இறக்குமதிக்கு, அதிக வரி விதிக்கப்பட்டது. மேலும், 'ஆஸ்திரேலியாவில், ஆசியர்கள் மீது, குறிப்பாக, கிழக்காசியர்கள் மீது, இனவெறி தாக்குதல்கள் நடப்பதால், அங்கு சென்று படிப்பதை, சீன மாணவர்கள் தவிர்க்க வேண்டும்' என, சீனா தெரிவித்தது. சீன சுற்றுலா பயணியரும், ஆஸ்திரேலியா செல்வதை தவிர்க்க வேண்டுமென, சீன அரசு கேட்டுக் கொண்டது.


latest tamil newsசீனாவின் நடவடிக்கை குறித்து, ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மோரிசனிடம், செய்தியாளர்கள் கேட்டபோது, ''நாங்கள் வெளிப்படையாக வர்த்தகம் மேற்கொள்ளும் நாட்டைச் சேர்ந்தவர்கள்.எனவே, தேவையற்ற மிரட்டல் மற்றும் வற்புறுத்தல்களுக்காக, எங்கள் மதிப்பை நாங்கள் விற்க தயாராக இல்லை,'' என்றார்

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X