பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

புவனகிரி : புவனகிரி அடுத்த வாண்டையான்குப்பத்தில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது.

புவனகிரி அடுத்த வாண்டையான் குப்பம் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளாக நல்லத்தண்ணீர் குளம் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்துள்ளது.இந்த குளத்தில், காவிரி தண்ணீரை அரியகோஷ்டி வாய்க்காலிலிருந்து, வரத்து வாய்க்கால் வழியாக குளத்தில் நிரப்பியும், மழைகாலங்களில் இந்த வாய்க்கால் வழியாக வடிய வைத்தனர். இக்குளத்தில் தண்ணீர் தேக்கியதால் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துள்ளது.கடந்த சில ஆண்டுகளாக குளத்திற்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்காலை அப்பகுதியினர் ஆக்கிரமித்திருந்தனர்.

இதனால் மழை காலங்களில் தண்ணீர் வடியாமல் ஊருக்குள் இருந்த குளம் துர்நாற்றம் வீசியதுடன், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் போனது.இது குறித்து அப்பகுதியினர் கோரிக்கை வைத்தும், ஆக்கிரமிப்பு அகற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடவில்லை. வரத்து வாய்க்காலின் மேல் ஊராட்சி நிதியில் சிமென்ட் சிலாப் அமைத்துள்ளனர்.இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அருள்ராஜ் பொதுமக்கள் சார்பில் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு ஆதாரங்களுடன் புகார் மனு கொடுத்தார்.

அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்த நேற்று வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்துறை உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, மருதுார் போலீசார் பாதுகாப்புடன் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பரமேஸ்வரன் தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X