சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதித்த பெண்ணின் கணவர் இறப்பு

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

பண்ருட்டி : தொரப்பாடியில் கொரோனா தொற்று உறுதியானவரின் கணவர் இறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சி புது நகரை சேர்ந்தவர் , 55 வயது பெண். இவரது கணவர் ௬௦ வயது மனநலம் பாதித்தவர். அப்ெபண் கணவருடன் சென்னையில் தங்கி வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த 4 ம்தேதி தொரப்பாடி பேரூராட்சியில் உள்ள தனது வீட்டிற்கு கணவன் மனைவி இருவரும் வந்தனர். பின் சுகாதாரத்துறையினர் சோதனையில் 55 வயது பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவரை சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெண்ணின் கணவர் மற்றும் இவரது மாமியார் இருவருக்கும் சோதனைக்கு மாதிரி எடுத்தனர்.

முடிவு வராத நிலையில் நேற்று காலை தொற்று ஏற்பட்ட பெண்ணின் கணவர் இறந்தார்.தகவலறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார், பண்ருட்டி தாசில்தார் உதயகுமார், புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, வி.ஏ.ஓ. தமிழரசி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.சிகிச்சையில் உள்ள பெண்ணிற்கு தகவல் தெரிவித்து, தொரப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் பாதுகாப்பாக நேற்று காலை இறந்த முதியவரின் உடலை அடக்கம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X