தமிழ்நாடு

சிக்கல்! மாவட்டத்தில் தனியார் பஸ்களை இயக்குவதில்...நஷ்டத்தில் ஓடுவதால் உரிமையாளர்கள் முடிவு

Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 சிக்கல்!   மாவட்டத்தில் தனியார் பஸ்களை இயக்குவதில்...நஷ்டத்தில் ஓடுவதால் உரிமையாளர்கள் முடிவு

கொரோனா தடுப்பு ஊரடங்கால், கடந்த மார்ச் 24ம் தேதி முடங்கிய பஸ் போக்குவரத்து ஜூன் 1ல் துவங்கியது.

60 சதவீத பயணிகளுடன், அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி முதல் தனியார் பஸ்களை இயக்க பஸ் உரிமையாளர் சம்மேளனம் முடிவு செய்து, இரண்டு நாட்களாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், அரசு நிர்ணயித்துள்ள 60 சதவீத பயணிகள் கூட பஸ்சில் ஏறாததால் பெரும்பாலான பஸ்கள் காலியாகவே ஓடியது.மக்கள் வெளியூர்களுக்குச் செல்ல அச்சப்படுவதால், பஸ்சில் செல்பவர்களின் எண்ணிக்கையும், எல்லா ஊர்களிலும் குறைவாகவே இருந்தது.இதனால் பஸ்களில் வருமானம் இல்லை என கூறி, பல தனியார் பஸ்கள் முதல் நாளிலேயே நிறுத்தப்பட்டன.

மாவட்டம் முழுவதும் உள்ள 240 தனியார் பஸ்களில் நேற்று 10 சதவீதம் மட்டுமே இயக்கப்பட்டது. ஓரளவு வருமானம் உள்ள சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி உள்ளிட்ட ரூட்களில் மட்டுமே பஸ் இயக்கப்பட்டது. தொழிலாளர்கள் சம்பளம், டீசல் செலவு, அன்றாடம் பஸ் பராமரிப்பு செலவு, வரி என, நாள் ஒன்றுக்கு ரூ.10,000 செலவாகிறது. ஆனால், தற்போது டிக்கெட் வசூல் ரூ.3000த்தில் இருந்து அதிக பட்சமாக 7,000 வரை மட்டுமே வருவதாகவும், பஸ் ஓடாமல் நின்றிருந்ததை விட குறைந்த பயணிகளுடன் இயக்கும் போதுதான் கூடுதல் நஷ்டம் ஏற்படுகிறது என, பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், கடலுார் மாவட்டத்தில் தனியார் பஸ்களை நஷ்டத்தில் இயக்க நாங்கள் தயாரில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். இதனால், கடலுார் மாவட்டத்தில் தனியார் பஸ்கள் தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், பஸ் போக்குவரத்து கடந்த 80 நாட்களாக நிறுத்தப்பட்டதால், தனியார் பஸ் உரிமையாளர்கள் மட்டுமின்றி, கடலுார் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.தற்போது பஸ் இயக்க முன்வந்த நிலையில், 60 சதவீத பயணிகளுடன் இயக்கினால் போதிய வசூல் இருக்காது. உரிமையாளர்கள் மேலும் பாதிப்புக்கு தள்ளப்படுவார்கள்.

எனவே, மக்கள் நலனையும், பஸ் உரிமையாளர்கள் நலனையும் கருத்தில் கொண்டு, குறைந்த பயணிகளை ஏற்றும்போது ஏற்படும் இழப்பீட்டிற்காக ஊக்கத்தொகையை அரசு வழங்க வேண்டும், பஸ்களுக்கான காலாண்டு வரியை (பஸ்சுக்கு ரூ.40,000), மூன்று காலாண்டிற்கு ரத்து செய்ய வேண்டும், காப்பீட்டு தொகை செலுத்த அவகாசம். பஸ் ஓடாததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவும், பஸ் பராமரிப்பு செலவுக்கென வட்டியில்லா வங்கி கடன் வழங்க வேண்டும் என, தெரிவிக்கின்றனர்.குறிப்பாக, கேரளாவில் உள்ளதுபோல், பஸ் கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்த வேண்டும் என்பதும், மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என்பதும் பஸ் உரிமையாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தகோபால், நெல்லை ,In பெங்களூர் இந்த தனியார் பேருந்துகள் ஆட்கள் வரட்டும் என்று ஒரு ஒரு நிறுத்தத்திலும் 10 நிமிடம் வரை நிறுத்தி நம்ம பொறுமையை சோதிப்பாங்க, அந்த வயித்தெரிச்சல் இப்போ வேலை செய்து, அராசாங்க பேருந்து தான் நல்லது, ஒரு ரூபாய் குறைவு என்று தனியார் பேருந்தை நாடினால் நம்முடைய நேரம் விரையம் ஆகிறத.
Rate this:
Cancel
12-ஜூன்-202006:00:31 IST Report Abuse
ஆப்பு வேற வழியில்லை. வீட்டில் முடங்கி இருப்போர்களை ரவுண்டு கட்டி அடிச்சு வெளியூர் அனுப்பனும். அப்புறம் வீட்டில் சமையல் அறைக்கு சீல் வெச்சு வெளியே ஓட்டலில் சாப்பிடச் சொல்லலாம். ஓட்டலில் சாப்பிட ஆளுக்கு 5000 ரூவாய் கணக்கில் போடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X