இந்தியா

நகராட்சி பகுதி சாலைகளில் மீன் விற்க கலெக்டர் தடை

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சாலைகளில் மீன்களை விற்பது தடை செய்வதாக கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து கலெக்டர் அருண் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி விதிகளைப் பின்பற்றாமல் மகாத்மா காந்தி சாலையில் குபேர் அங்காடி மற்றும் நகர எல்லைக்குள் மீன்களை ஏலம் விடுதல் மற்றும் விற்பனை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.இதனால், மக்களின் பாதுகாப்பு கருதி, குபேர் அங்காடி வளாக வெளிப் புறச் சாலையில் மற்றும் அங்காடியின் உள்ளே மீன் விற்பது, ஏலம் விடுவது தடைசெய்யப்படுகிறது.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நவீன சுகாதார மீன் அங்காடியில் மட்டுமே ஏலம் விட வேண்டும்.ஏலக்கூடத்திற்கான ஏலதாரரை நியமிக்க உழவர்கரை நகராட்சியால் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யும் வரை, நவீன சுகாதார மீன் அங்காடி ஏலக் கூடத்தில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினர் கவனிக்க வேண்டும்.மேலும் புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சாலைகளில் மீன்களை விற்பது தடை செய்யப்படுகிறது.

நகராட்சியால் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே மீன் விற்க வேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்தும் இன்று12ம் தேதி முதல் அமல்படுத்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, காவல் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X