மார்க்கெட் கமிட்டி நாளை இயங்காது விவசாயிகளுக்கு நிர்வாகம் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட் கமிட்டி நாளை இயங்காது விவசாயிகளுக்கு நிர்வாகம் அறிவிப்பு

Added : ஜூன் 12, 2020
Share

விருத்தாசலம் : விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி, நாளை இயங்காது என்பதால் விளைபொருட்களை எடுத்து வர வேண்டாம் என விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கின் போது விளைபொருட்களை விற்பனை செய்ய வசதியாக மார்க்கெட் கமிட்டி செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர். இதன் பேரில் மார்க்கெட் கமிட்டிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வழக்கம்போல செயல்படவும், விளைபொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டு தேவையில்லை எனவும் அரசு அறிவித்தது. அதன்படி, விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் நெல், எள், உளுந்து உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடந்தது.

மேலும், அரசு அலுவலகங்கள் வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் என அரசு அறிவிப்பின்படி, விடுமுறை நாளான சனிக்கிழமைகளிலும் கமிட்டி இயங்கியது.இந்நிலையில், மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து, அன்று கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியது. விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி, நாளை (13ம் தேதி) இயங்காது என கமிட்டி நிர்வாகம் அறிவித்துள்ளது.இதனால், வரும் 15ம் தேதி, திங்கட்கிழமை, வழக்கம்போல் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, அன்று கொள்முதல் பணிகள் துவங்கும் எனவும், விடுமுறை நாட்களில் விளைபொருட்களை விவசாயிகள் எடுத்து வர வேண்டாம் எனவும் கமிட்டி கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X