பொது செய்தி

தமிழ்நாடு

மணிமுக்தாற்றில் படித்துறை புனரமைக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது.

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள படித்துறைகளை, தமிழக அரசின் சிறப்பு தன்னிறைவு திட்டத்தில் புனரமைக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது.

அதன்படி 70 சதவீதம் அரசு நிதி, 30 சதவீதம் ஜெயின் ஜூவல்லரி நிறுவனம் சார்பிலும், இத்திட்டத்திற்கு செலவிடப்பட உள்ளது.இதற்கான மதிப்பீட்டு தொகையைத் தீர்மானிக்கும் வகையில், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நேற்று முதற்கட்ட ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் ஆய்வு செய்து, கலைச்செல்வன் எம்.எல்.ஏ., ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர் சந்த், பி.டி.ஓ., ஜெயக்குமாரி, ஒன்றிய சேர்மன் செல்லத்துரை, பொறியாளர்கள் செந்தில்வடிவு, தேன்மொழி, துணை பி.டி.ஓ., சிவா ஆகியோருடன் கலந்து ஆலோசனை நடத்தினார்.

அதில், படித்துறைகள் சீரமைக்கும் துாரம், தொகை உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மதிப்பீடு தயாரித்த பின், அரசிடம் இருந்து பணி ஆணை பெற்று பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X