இந்தியா

திருக்கனுார் புறவழிச் சாலையில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

திருக்கனுார் : திருக்கனுார் ஏரிக்கரை புறவழிச் சாலையில் தெருமின் விளக்குகள் இல்லாதததால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

திருக்கனுார் வணிகர் வீதியில், பல்வேறு கடைகள், ஓயின்ஷாப், மெடிக்கல் உள்ளிட்டவை அமைந்துள்ளன. வணிகர் வீதி சாலை வழியாக மண்ணாடிப்பட்டு, மதகடிப்பட்டு, வில்லியனுார், புதுச்சேரி, விழுப்புரத்திற்கு 50க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.மேலும், திருபுவனை தொழிற்பேட்டைக்கு செல்லும் கனரக வாகனங்கள் இச்சாலையின் வழியாக செல்வதால், வணிகர் வீதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனை தடுக்கும் பொருட்டு, விழுப்புரத்தில் இருந்து வணிகர் வீதி வழியாக செல்லும் கனகர வாகனங்கள் நேரடியாக மண்ணாடிப்பட்டு கிராமத்திற்கு சென்றுவர திருக்கனுார் எரிக்கரை பகுதியில் 2013ம் ஆண்டு புறவழி சாலை அமைக்கப்பட்டது.இச்சாலையின் வழியாக கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.திருக்கனுார் ஏரிக்கரை புறவழிச் சாலையில் போக்குவரத்து துவங்கி, 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் மின் விளக்குகளை அமைக்கவில்லை. இந்த சாலையில் மின் விளக்குகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X