இந்தியா

அரசு அலுவலக  படிக்கட்டில் தவறி விழுந்த ஊழியர் பலி

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

புதுச்சேரி : படிக்கட்டில் தவறி விழுந்த அரசு ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புதுச்சேரி ரெயின்போ நகர் 4வது குறுக்கு தெருவில் வசித்தவர் ரங்க மன்னார்,55 . திருமணமாகாத மாற்றுத் திறனாளியான இவர், தனது தாயோடு வசித்தார். கணக்கு, கருவூலத் துறையில் கிளார்க்காக பணி புரிந்தார்.

நீரழிவு நோய், ரத்த அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த மாதம் 20ம் தேதி பணிக்கு சென்றார். காலை 9 மணியளவில் அலுவலக முதல் மாடியில் இருந்து படிக்கட்டில் கீழே இறங்கியபோது, தவறி விழுந்தார்.தலையில் படுகாயடைந்து மயங்கி விழுந்த அவரை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு மயக்க நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து ரங்கமன்னாரின் சகோதரர், வெங்கடாஜலபதி கொடுத்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X