நிரவ் மோடிக்கு காவல் நீட்டிப்பு: பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

லண்டன் : வங்கிக் கடன் மோசடியில் சிக்கியுள்ள வைர வியாபாரி நிரவ் மோடிக்கு, நீதிமன்ற காவலை, ஜூலை, 9ம் தேதி வரை நீட்டித்து, பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news




மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்சியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதைதிருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பினர்.

ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிரவ் மோடி, கடந்த ஆண்டு, மார்ச் மாதம், லண்டனில் பிடிபட்டார். அவரை கைது செய்த பிரிட்டன் போலீசார், 'வான்ட்ஸ்வொர்த்' சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையே, அவரை நாடு கடத்தும் முயற்சியில், இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. அது தொடர்பான வழக்கு, லண்டனில் உள்ள, 'வெஸ்ட்மின்ஸ்டர்' நீதிமன்றத்தில் நடக்கிறது.


latest tamil news




கடந்த மாதம், முதற்கட்ட விசாரணை முடிந்தது. அடுத்த கட்ட விசாரணை, செப்டம்பர், 7ம் தேதி துவங்கி, ஐந்து நாட்கள் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நிரவ் மோடிக்கு நீதிமன்ற காவலை நீட்டிப்பது தொடர்பான விசாரணை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், நேற்று நடந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சிறையில் இருந்தபடி, நிரவ் மோடி ஆஜரானார். இதை விசாரித்த மாவட்ட நீதிபதி சாமுவேல் கூஸி, நிரவ் மோடிக்கான நீதிமன்ற காவலை, ஜூலை, 9 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
12-ஜூன்-202016:09:03 IST Report Abuse
Dr. Suriya அடுத்த மல்லையா....கவலை படாதீங்க நீரவ்...இருக்கவே இருக்கு கடைசியா மனிதாபிமான கருணை மனு....
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
12-ஜூன்-202014:48:25 IST Report Abuse
blocked user பிரிட்டிஷ் நீதித்துறை ஏன் இந்தியர்களை இந்தியாவுக்குள் அனுப்பாமல் நாட்டாண்மை செய்கிறது?
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
12-ஜூன்-202013:34:56 IST Report Abuse
Rameeparithi காலம் கடத்தாமல் ஆக வேண்டியதை செய்தால் நீதி காக்கப்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X