சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளிக்கு கத்திவெட்டு: இருவர் கைது

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

புதுச்சத்திரம் : முன்விரோதம் காரணமாக கூலித்தொழிலாளியை கத்தியால் வெட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்களத்தைச் சேர்ந்தவர் தனசிங்கு, 50; கூலித்தொழிலாளி. இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்தசக்கரவர்த்திக்கும் இடையே, வீடு கட்டுவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது.இந்நிலையில் இவர்களுக்குள் நேற்றுமுன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சக்கரவர்த்தியின் ஆதரவாளர்கள் அன்பரசன், கலையரசன் ஆகியோர் தனசிங்கை ஆபாசமாக திட்டி, கத்தியால் வெட்டினர்.இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் சப்.இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் வழக்கு பதிந்து, சக்கரவர்த்தி, 54; அன்பரசன், 30;கைது செய்து, தலைமறைவாக உள்ள கலையரசனை தேடி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X