இந்தியா

அரியாங்குப்பம் பகுதியில் களப் பணி உதவி இயக்குனர் தீவிர ஆலோசனை

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

புதுச்சேரி : அரியாங்குப்பம் பகுதியில் மலேரியாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக, சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையத்தின் அதிகாரிகளுடன், உதவி இயக்குனர் கணேசன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

அரியாங்குப்பம் பகுதியில் சமீபத்தில் மலேரியாவால் சிலர் பாதித்தனர். இதையடுத்து, சுகாதாரத் துறை உதவி இயக்குனர்(மலேரியா) டாக்டர் கணேசன் தலைமையில் பூச்சியியல் நிபுணர் குணசேகரன், தொழில்நுட்ப உதவியாளர் செந்தில்வேலவன் மற்றும் மலேரியா அலுவலக குழுவினர், அரியாங்குப்பத்தில் உள்ள சுகாதாரம் மற்றும் நல வாழ்வு மையத்திற்கு நேற்று சென்றனர். நலவாழ்வு மையத்தின் மருத்துவ அதிகாரி தாரிணி, சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் சுகாதார உதவியாளர்களுடன், உதவி இயக்குனர் கணேசன் ஆலோசனை நடத்தினார்.

கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யா, ஜப்பானிய மூளைக் காய்ச்சலை தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.கொம்யூன் பஞ்சாயத்து ஆணையருடன் ஆலோசித்து, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுடன் இணைந்து வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென உதவி இயக்குனர் கணேசன் கேட்டுக் கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X