விருத்தாசலம் பகுதியில் நெற்பயிரில் செம்பேன் தாக்குதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விருத்தாசலம் பகுதியில் நெற்பயிரில் செம்பேன் தாக்குதல்

Added : ஜூன் 12, 2020
Share
விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்களை செம்பேன்கள் அதிகளவில் தாக்கியுள்ளது. அதனை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விருத்தாசலம் பகுதியில் 3 ஆயிரம் ெஹக்டேர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மண்ணில் உப்புத்தன்மை

விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்களை செம்பேன்கள் அதிகளவில் தாக்கியுள்ளது.

அதனை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விருத்தாசலம் பகுதியில் 3 ஆயிரம் ெஹக்டேர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மண்ணில் உப்புத்தன்மை அதிகரித்து நெற்பயிர்கள் காய்கின்றன. பாசி அதிகளவு படர்ந்துள்ளதால், பயிர்களின் வளர்ச்சி குறைகிறது. மேலும், செம்பேன் பூச்சிகள் நெற்பயிர்களை அதிகளவில் தாக்கியுள்ளன. இந்த பிரச்னைகளை சரிசெய்ய, உவர் தன்மையை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு அதிகம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

பாசி அதிகம் படர்ந்துள்ள வயலில், 2கிலோ காப்பர் சல்பேட்டினை போதுமான மணலுடன் கலந்து இட வேண்டும். இலையின் பச்சை தன்மைக்கேற்ப தழைச்சத்து உரம் இட வேண்டும். அளவிற்கு அதிகமாக யூரியா இடுவதை தவிர்க்க வேண்டும்.செம்பேன் தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை பாதுகாக்க, ஸ்பைரோமெசிபென் மருந்தினை ஒருலிட்டர் தண்ணீருக்கு ஒரு மிலி அளவு கலந்து தெளிக்க வேண்டும். அல்லது புரோபைர்கைட் என்ற மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மிலி அளவு கலந்து தெளிக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X