இந்தியா

காரைக்காலில் கூடுதலாக 100 எக்டேரில் பருத்தி: அமைச்சர் கமலக்கண்ணன் தகவல்

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

புதுச்சேரி : காரைக்காலில் கூடுதலாக 100 எக்டேரில் பருத்தி பயிர் சாகுபடி செய்யப் பட்டுள்ளது என அமைச்சர் கமலக்கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:காரைக்கால் மாவட்டத்தில் நடப்பு கோடை பருவத்தில் 624.55 எக்டேர் பரப்பளவில், 942 விவசாயிகள் பருத்தி பயிரிட்டுள்ளனர். இது கடந்த பருவத்தைவிட சுமார் 100 எக்டேர் அதிகமாகும்.இயற்கை இடர்பாடுகளால், பருத்தி விவசாயிகள் பாதிக்காமல் இருக்க, இந்த ஆண்டு, அரசு சார்பில் பருத்தி பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.பயிர் காப்பீட்டிற்காக, மாநில அரசின் பங்களிப்பான ரூ.31 லட்சத்து 68 ஆயிரத்து 232ம், விவசாயிகள் பங்களிப்பான ரூ.16 லட்சத்து 17 ஆயிரத்து 230 சேர்த்து மொத்தமாக ரூ.47 லட்சத்து 85 ஆயிரத்து 502 செலுத்தி பயிர்களைக் காப்பீடு செய்துள்ளது.

இதன்படி ஒரு எக்டேர் பருத்தி பயிர் ரூ.60 ஆயிரத்திற்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு எக்டேருக்கு மொத்த பிரிமியம் தொகை ரூ.26 ஆயிரத்து 508. இதில் விவசாயிகள் பங்களிப்பு ரூ.3,000 , மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பு ரூ.23 ஆயிரத்து 508 ஆகும்.காரைக்கால் மார்க்கெட் கமிட்டி மூலம், சனிக்கிழமைகளில் மறைமுக ஏலம் மூலம் விவசாயிகள் பருத்தியை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன்படி, சென்ற வார ஏலத்தில் பருத்தி பஞ்சிற்கு விலையாக கிலோ ரூ.41 முதல் ரூ.46 வரை விற்றது. விவசாயிகள் நிலத்தில் விளைந்த பஞ்சினை மார்க்கெட் கமிட்டி ஏற்பாடு செய்யும் ஏல விற்பனையில் விற்று பயனடையலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X