காரைக்கால் எல்லைகள் தீவிர கண்காணிப்பு| Dinamalar

இந்தியா

காரைக்கால் எல்லைகள் தீவிர கண்காணிப்பு

Added : ஜூன் 12, 2020
Share

காரைக்கால் : தமிழகப் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் காரைக்கால் எல்லைப் பகுதியில் இ பாஸ் உள்ளவர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர்.

காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பூவம், நண்டலாறு, வாஞ்சூர். அம்பகரத்துார், நல்லாத்துார் உள்ளிட்ட 7முக்கிய சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.சோதனைச் சாவடிகளில் எஸ்.பி.,க்கள் வீரவல்லபன், ரகுநாயகம் ஆய்வு மேற்கொண்டனர். மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களை கண்காணிப்பிற்கு பிறகு அனுமதிக்கின்றனர். மேலும் தமிழகத்திலிருந்து வரும் வாகனங்கள் இ பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X