சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மொபட்டில் சென்ற இருவர் பலி

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மொபட் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் இறந்தனர். விழுப்புரம் அடுத்த கொண்டசமுத்திரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகேசவன், 35; சென்னை, சோழிங்கநல்லுாரில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். இவர், பண்ருட்டி, அண்ணா நகரில் உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்க, நேற்று முன்தினம் இரவு, தனது அண்ணன் மகன் ரவிக் குமார், 18; என்பவருடன், ஹோண்டா ஆக் டிவா

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மொபட் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் இறந்தனர்.

விழுப்புரம் அடுத்த கொண்டசமுத்திரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகேசவன், 35; சென்னை, சோழிங்கநல்லுாரில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். இவர், பண்ருட்டி, அண்ணா நகரில் உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்க, நேற்று முன்தினம் இரவு, தனது அண்ணன் மகன் ரவிக் குமார், 18; என்பவருடன், ஹோண்டா ஆக் டிவா மொபட்டில் சென்று கொண்டிருந்தார் இவர் களுக்கு முன்னால், உறவினர்கள் காரில் சென்றனர்.நள்ளிரவு 12:30 மணியளவில், பண்ருட்டி அருகே சென்றபோது, மொபட்டில் வந்தவர்களை காணாததால், காரில் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்த வழியாக சென்று பார்த்தனர்.

அப்போது, விழுப்புரம் அடுத்த கோலியனுார், பிள்ளையார்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே, விபத்தில் சிக்கி கிருஷ்ணகேசவன், ரவிக்குமார் ஆகிய இருவரும் இறந்து கிடந்தனர். விபத்து ஏற்படுத்தியது எந்த வாகனம் என தெரியவில்லை.வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X