சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் அருகே 'போக்சோ'வில் இருவர் கைது

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

திண்டிவனம் : மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான டிரைவர் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் வெங்கடேஷ், 27; இவர் வெளியூர் கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு படித்த, 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, அவருடன் நெருங்கிப் பழகினார். கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி, மயிலம் முருகன் கோவில் அருகே சிறுமியை வெங்கடேஷ் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சிறுமியை, ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மைனர் என்பதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம், திண்டிவனம் போலீசுக்கு புகார் தெரிவித்தது.போலீஸ் விசாரணையில், சிறுமி அளித்த தகவலின்பேரில், டிரைவர் வெங்கடேஷ் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ், திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா வழக்குப் பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தார்.

மற்றொரு வழக்குவிழுப்புரம் மாவட்டம், மயிலம் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் சரவணன், 24; வேன் டிரைவர். இவர், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது 10ம் வகுப்பு படித்த மாணவியை, பள்ளிக்கு செல்லும்போது கேலி செய்துள்ளார். இதனால் மாணவியை, வெளியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தனர்.கடந்த 10ம் தேதி அங்கு சென்ற சரவணன், சிறுமியை ஆபாசமாக பேசி, ஆபாச சைகை காட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, சரவணனை 'போக்சோ' சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X