பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்சலக வாடிக்கையாளர்கள் பரிசோதனைக்கு பின் அனுமதி

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், தலைமை அஞ்சல் அலுவலகம், கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவை மையம் இயங்குகிறது. தினமும், நுாற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்னர்.

இந்நிலையில், அஞ்சலகத்தில், கொரோனா பரவலை தடுக்க, அஞ்சலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, அலுவலகம் நுழைவாயிலில், 'தெர்மல் ஸ்கேனர்' மூலம், உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, முக கசவம் அணிந்து இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.மேலும், அலுவலகத்திற்குள் சென்றதும், கால்களால் பெடலை அழுத்தினால், கிருமி நாசினி திரவம் வழங்கும் கருவி அமைக்கப்பட்டு உள்ளது.அதில், கைகளை சுத்தம் செய்தபின், ஒரு மீட்டர் இடைவெளியில், வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்பதற்காக, கட்டம் போடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X