படப்பையில் அள்ளப்படாமல் உள்ள குப்பை கழிவுகள்| Dinamalar

படப்பையில் அள்ளப்படாமல் உள்ள குப்பை கழிவுகள்

Added : ஜூன் 12, 2020
Share

படப்பை : குன்றத்துார் ஒன்றியம், படப்பை ஊராட்சியில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சென்னையின் புறநகர் பகுதியில் படப்பை அமைந்துள்ளதால், இங்கு, நாளுக்கு நாள், குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், படப்பை ஊராட்சியின் பல இடங்களில், குப்பை கழிவுகள் அள்ளப்படாமல் உள்ளன.இது குறித்து, படப்பை மக்கள் கூறியதாவது:படப்பையில், கொரோனா வைரசால், 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஊராட்சியின் பல பகுதிகளில் குப்பை அள்ளப்படுவதில்லை. கிருமி நாசினிகள் சரிவர தெளிக்கப்படுவதில்லை. கழிவு நீர் கால்வாயில் அடைப்புகள் உள்ளன. குடியிருப்பில் பன்றிகள் சுற்றி திரிகின்றன.

குன்றத்துார் ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், படப்பையில் இயங்கி வரும் நிலையில், இப்பகுதியில் சுகாதார சீர்கேடோடு உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X