தமிழ்நாடு

செங்கையில் ஒரே நாளில் 127 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒரே நாளில், 127 பேருக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை, 2,313 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், 903 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று, தாம்பரம் - 45, பல்லாவரம்- - 39--, செங்கல்பட்டு - 26, வண்டலுார் - ஏழு, மதுராந்தகம் - நான்கு, திருக்கழுக்குன்றம் - இரண்டு, திருப்போரூர்- - ஒன்று மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மூவர் என, மொத்தம், 127 பேருக்கு, வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 2,444 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூரில் 79

சென்னைக்கு மிக அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று, 1,500ஐ கடந்து விட்டது.நேற்று, கொரோனா தொற்று, 79 ஆக உறுதியானது. இதையடுத்து, தொற்று எண்ணிக்கை, 1,656 ஆக உயர்ந்து, தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை, 807 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்; 16 பேர் உயிரிழந்த நிலையில், 833 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் 19

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 595 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், நேற்று புதிதாக, 19 பேருக்கு, வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.குன்றத்துார் - 13, காஞ்சிபுரம் - மூன்று, ஸ்ரீபெரும்புதுார் - இரண்டு, வாலாஜாபாத் தாலுகாவில் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 614 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X