சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

மயங்கி விழுந்து ஒருவர் பலி

திருத்தணி: திருத்தணி, இந்திரா நகர், பெருமாள் மகன் சீனிவாசன், 54. இவர், திருத்தணி அருகே, இயங்கி வரும் தனியார் டயர் தொழிற்சாலையில், நிரந்தர ஊழியராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் சீனிவாசன், மதிய வேலைக்காக, கம்பெனிக்கு சென்றார். அங்கு வேலை செய்யும் போது, திடீரென மயங்கி விழுந்தார். திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.பின், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, திருத்தணி பஸ் நிலையம் அருகே இறந்தார். திருத்தணி போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மாட்டு வண்டிகள் பறிமுதல்

கனகம்மாசத்திரம்: திருத்தணி அடுத்த, அருங்குளம் பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில், அரசு அனுமதியின்றி, மணல் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, கனகம்மாசத்திரம் போலீசார் மேற்கண்ட ஆற்றில் நேற்று சோதனை செய்தனர். அப்போது, அரசு அனுமதியின்றி, ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த இரண்டு மாட்டு வண்டிகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மூதாட்டிக்கு கொலை மிரட்டல்\

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், பெரியகளக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகம்மாள், 60. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரவேலு, 48, என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம், நாகம்மாள், பெரியகளாக்காட்டூர் காலனி வழியாக, நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சுந்தரவேலு, நாகம்மாளை வழிமடக்கி, கையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து, திருவாலங்காடு போலீசில், நாகம்மாள் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, சுந்தரவேலுவை தேடி வருகின்றனர்.

மூவருக்கு, 'காப்பு'

மப்பேடு: மப்பேடு அடுத்த, உசேன் நகரைச் சேர்ந்தவர் தயாளன், 65. இவரது மகன் மகேஷ். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் நாகப்பன் மகன்களான பாலமுருகன், 32, சரவணன், 30 மற்றும் இவரது உறவினரான கணபதி மகன் உடையப்பன், 36 ஆகிய மூவருக்குமிடையே முன்விரோதம் இருந்துள்ளது.இந்நிலையில். கடந்த, 8ம் தேதி. தயாளன் மற்றும் மகேஷை மூவரும் சேர்ந்து இரும்பு கம்பி மற்றும் உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதில் படுகாயமடைந்த இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, மப்பேடு போலீசில், தயாளன் அளித்த புகாரையடுத்து, போலீசார் மூவரையும் கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X