பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை குடியிருப்புகள் வேகமாக காலி; வாடகை குறைந்தது: 'லீசு'க்கு திடீர் மவுசு

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, சென்னை, புறநகரில் ஏராளமான கடை, வீடுகள் காலியாகி வருகின்றன.இதனால், வாடகை குறைக்கப்பட்டு வருகிறது. லீசுக்கு விடுவதும் அதிகரித்து வருகிறது.

சென்னையில் வீடு, கடைகளுக்கான வாடகை, 'அட்வான்ஸ்' உள்ளிட்டவை, கடந்த சில ஆண்டுகளாக கணிசமான அளவு உயர்ந்து வந்தது. மேலும், வாடகை தாரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.கொரோனா வைரஸ் பரவாமல் தவிர்க்கும் வகையில், கடந்த மார்ச், 23ம் தேதி முதல், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இதனால், அனைத்து தொழில்களும், இரண்டு மாதங்களுக்கு மேலாக முடங்கின. சிறு, குறுந்தொழில் புரிய கடை எடுத்தவர்கள், வாடகை கொடுக்க முடியாமல் தவித்தனர்.தற்போது, சென்னை புறநகரில், கொரோனா பாதிப்பு குறையாமல் அதிகரித்து வருகிறது.அடுத்த, மூன்று மாதங்களுக்கு சகஜ நிலைக்கு திரும்பாது என்பதை உணர்ந்து, பலர் வாடகைக்கு எடுத்த கடைகளை, காலி செய்து வருகின்றனர்.

அதேபோல, சொந்த ஊர் திரும்பும் பலர், வீடுகளை காலி செய்து வருகின்றனர். இதனால், சென்னை புறநகரில் ஏராளமான கடைகள், வீடுகள் காலியாகி வருகின்றன.தென்சென்னையில் உள்ள பல, ஐ.டி., நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடி பணிபுரிய வசதி செய்துக் கொடுத்துள்ளன. இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாடகை கட்டடங்கள், காலியாகி வருகின்றன.இவ்வாறு காலியாகும் பிரமாண்ட கட்டடங்கள், கடைகள் மற்றும் வீடுகளில், தற்போதைய நிலைமையில் யாரும் வாடகைக்கு வரமாட்டார்கள். இதனால், தங்கள் வாடகை, அட்வான்ஸ் தொகையை, கணிசமான அளவு குறைத்து வருகின்றனர்,

உரிமையாளர்கள்.தொழில் முதலீட்டுக்கு வசதியாக பலர், தங்கள் வீடு, கடைகளை லீசுக்கு விடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், அடுத்த சில மாதங்களில் கணிசமான கடைகள், வீடுகள் காலியாகும் என்பதால் மேலும், வாடகை குறைய வாய்ப்பு அதிகம் உள்ளது என, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X