பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலம்: மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: 'குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக, தமிழகத்தை உருவாக்கிட, அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு, அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என, முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்து உள்ளார்.குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி, முதல்வர் விடுத்துள்ள செய்தி: உலகெங்கும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான, விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் ஜூன், 12, குழந்தை
child labour day, child labour, Edappadi Palanisamy, EPS, tamil nadu chief minister, tamil nadu, முதல்வர், குழந்தை தொழிலாளர்

சென்னை: 'குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக, தமிழகத்தை உருவாக்கிட, அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு, அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என, முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி, முதல்வர் விடுத்துள்ள செய்தி: உலகெங்கும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான, விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் ஜூன், 12, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.


latest tamil newsஇப்பூமியில் பிறக்கும், குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் கல்வி உரிமை இன்றியமையாதது.அந்த உரிமைகளை, அவர்களிடமிருந்து பறிப்பது, இயற்கை நியதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது.தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் முறையை, முற்றிலுமாக ஒழித்திட, எண்ணற்ற திட்டங்களை, அரசு சீரிய முறையில், செயல்படுத்தி வருகிறது.

'குழந்தைகளின் வருமானம் நாட்டிற்கு அவமானம்' என்பதை உணர்ந்து, குழந்தைகளின் உரிமைகளை மதித்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக, தமிழகத்தை உருவாக்கிட, அரசு எடுக்கும் முயற்சிகளுக்கும், திட்டங்களுக்கும், அனைத்து தரப்பினரும், ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
12-ஜூன்-202014:04:04 IST Report Abuse
B.s. Pillai Child labour is through out India, especially in TamilNadu , the children are involved in match box factories and cracker industries. The Karnataka peole are very good in managing child labour. I have seen them working in canteens in day time and all of them invariably attend night Kananda medium schools in Mumbai and when they grow old and complete 10 th Std, they get sufficient experience to start their own business , mostly small hotels or canteens in industrial areas. We should plan in this way at least, if we can not abolish child labour totally.
Rate this:
Cancel
பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
12-ஜூன்-202013:27:19 IST Report Abuse
பிம்பிலிக்கி பிளாப்பி சினிமாவில் டீவி சீரியலில், பாட்டு போட்டி என்ற பெயரில் வர்த்தக நிகழ்ச்சி இவைகளில் குழந்தைகள் நடிப்பது கூட குழந்தை தொழிலாளர் சட்டத்தில் வராதா ?
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
12-ஜூன்-202013:23:05 IST Report Abuse
S.Baliah Seer முதல்வரின் அறிவிப்பு நன்றாகத்தான் உள்ளது.ஆனால் சினிமா,நாடகம் இவற்றில் பெண் குழந்தைகளை நடிக்க வைத்து சம்பாதிப்பது மட்டும் வருமானம் ஆகாதா? இடத்துக்கு ஏற்றார் போல் சட்டம் நம் நாட்டின் ஒட்டுமொத்த இறையாண்மையையும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது.என் காலத்தில் சில பையன்கள் பால் கறந்து வீட்டுக்கு வீடு கொண்டு போட்டுவிட்டு வகுப்பிற்கு வருவார்கள்.அப்பொழுதெல்லாம் குழந்தை தொழிலாளர் பிரச்சினை இல்லை. பெண் குழந்தைகளை வேலைக்கு அனுப்பியதால்தான்,அவர்கள் வேலை செய்யும் இடங்களில் சீரழிக்கப் பட்டதால்தான் பல பாத்து காப்பு சட்டங்கள் வந்துள்ளன.அந்த சட்டங்களை சினிமா டிவி -நிகழ்ச்சிகளில் முதலில் நடைமுறை படுத்துங்கள்.எல்லாம் சரியாகப் போய்விடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X