சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 19.3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

அனகாபுத்துார் : அனகாபுத்துாரில் இருந்து, லாரி மூலம் ஆந்திராவிற்கு கடத்த இருந்த, 19.3 டன் ரேஷன் அரிசியை, போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

பல்லாவரத்தை அடுத்த, சங்கர் நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர்கள் கந்தன், பால்ராஜ் ஆகிய இருவரும், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அனகாபுத்துார், காமராஜபுரம், அயோத்தியம்மன் லாரி சர்வீஸ் என்ற இடத்தில், சந்தேகத்திற்கிடமான முறையில், ஒரு லாரியில், ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.இதை கவனித்த போலீசார், அங்கு சென்று விசாரித்தனர். அதில், ரேஷன் அரிசியை, லாரி மூலம் ஆந்திராவிற்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. பின், அங்கிருந்தவர்களை, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.அதில், துாத்துக்குடியைச் சேர்ந்த அஜித்குமார், 42, என்பவர், ரேஷன் கடைகளில் இருந்து, அரிசி வாங்கி, மாவு கடைகளில் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அனகாபுத்துாரைச் சேர்ந்த அரிசி கடத்தல் கும்பலுடன், அஜித்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

பின், அந்த கும்பலிடம் இருந்து, மூட்டை மூட்டையாக அரிசி வாங்கி, லாரியில் ஏற்றி, மதுரவாயல் சோதனை சாவடி அருகே தயார் நிலையில் இருக்கும், மற்றொரு கும்பலுக்கு விற்பனை செய்து வந்ததும், அந்த கும்பல், ஆந்திராவிற்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது.இதையடுத்து, ஒரு லாரி, இரண்டு லோடு ஆட்டோக்கள், 70 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

அரிசி கடத்தலில் ஈடுபட்ட அஜித்குமார், 42, அனகாபுத்துாரைச் சேர்ந்த அப்துல்லா, 32, உள்ளிட்ட, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில், 19 ஆயிரத்து, 300 அரிசி மூட்டைகள் இருந்தன. இதற்கிடையில், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர், சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு விரைந்தனர். அவர்களிடம், அனைத்தையும் போலீசார் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X