விமான பயணிக்கு தொற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விமான பயணிக்கு தொற்று

Added : ஜூன் 12, 2020
Share

ஓமலூர்: சென்னையில் இருந்து, நேற்று முன்தினம், 38 பயணியர், விமானம் மூலம், சேலம் வந்தனர். அவர்களுக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, கருப்பூர் தனிமை மையம், சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். நேற்று, பரிசோதனை முடிவில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, 45 வயதுடையவருக்கு தொற்று உறுதியானது. இதனால், அவரை, மருத்துவ குழுவினர், சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். அவருடன், விமானத்தில் பயணித்த, சேலம் உள்பட, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை, வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தினர். நேற்று, சென்னையிலிருந்து, சேலம் வந்த, 39 பேருக்கு, பரிசோதனை எடுக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X