சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.ம.மு.க., நிர்வாகி வெட்டிக்கொலை: தந்தை, மகனுக்கு வலை

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

ஆத்தூர்: அ.ம.மு.க., நிர்வாகிவெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, தந்தை, மகனை போலீசார் தேடுகின்றனர்.
ஆத்தூர், புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 36; அ.ம.மு.க., நிர்வாகியாக இருந்தார். நேற்று, ஆத்தூர், கோரித்தெருவைச் சேர்ந்த, முத்துராஜாவிடம், கடன் வழங்கிய பணம் குறித்து கேட்டார். அதில், அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், இரவு, 7:30 மணிக்கு, புதுப்பேட்டை பாலம் வழியாக, நண்பர்களுடன் செந்தில்குமார் நடந்துசென்றுகொண்டிருந்தார். அப்போது, முத்துராஜா, அவரது மகன் தமிழரசன் ஆகியோர், செந்தில்குமாரை மறித்து அரிவாளால் வெட்டினர். செந்தில்குமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஆத்தூர் டவுன் போலீசார், தப்பிய தந்தை, மகனை தேடி வருகின்றனர். ஆத்தூர் டி.எஸ்.பி., ராஜூ, சம்பவ இடத்தில் விசாரித்தார். இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: இறந்த செந்தில்குமார், கடந்த, மே, 20ல், அவரது தந்தை செந்தாமரை, அண்ணன் செல்வத்தை தாக்கினார். அதில், செந்தில்குமார், அவரது மகன் கைது செய்யப்பட்டனர். தன் மனைவியின் நகையை பறித்ததாக, குடும்பத்தினர் மீதே, செந்தில்குமார் புகாரளித்து வந்தார். கடந்தாண்டில், விழுப்புரத்தில் பஸ் பயணியிடம், நகை பறித்த வழக்கில், இவரை, போலீசார் கைது செய்தனர். பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில், முத்துராஜா, மகன் தமிழரசன் சேர்ந்து, கொன்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை பிடித்து விசாரித்தால்தான், கொலைக்குரிய காரணம் தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X