பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி செயலர் மாற்றம்: உறுப்பினர்கள் வருத்தம்

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சி: செயலரின் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி, பூந்துறைசேமூர் ஊராட்சி உறுப்பினர்கள், மொடக்குறிச்சி யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதியிடம், நேற்று மனு கொடுத்தனர். வார்டு உறுப்பினர்கள் குருசாமி, ரூபதி, சாந்தாதேவி, ஜெயலட்சுமி ஆகியோர், கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பூந்துறை சேமூர் ஊராட்சி செயலராக பணிபுரிந்தவர் பரமன், 52; குளூர் ஊராட்சியை சேர்ந்த இவர், 17 ஆண்டுகளாக பணிபுரிந்தார். ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்களிடம் ஆலோசிக்காமல், யூனியன் நிர்வாகம் காகம் ஊராட்சிக்கு அவரை மாற்றியுள்ளது. அங்கு பணிபுரிந்தவரை, இங்கு நியமித்துள்ளனர். பரமனின் இடமாற்றத்தை ரத்து செய்து, மீண்டும் பணியமர்த்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X