பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் மக்களை கவரும் வகையில் நுழைவாயில்

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

சென்னிமலை: வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில், மக்களை கவரும் வகையில், நுழைவாயில் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னிமலை யூனியன், குமராவலசு ஊராட்சி, வெள்ளோடு அருகே வி.மேட்டுப்பாளையத்தில், 200 ஏக்கர் பரப்பில், பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் சீசன் காலங்களில் மஞ்சள் மூக்குநாரை, கரண்டிவாயன், கூழைக்கடா, நத்தைக்குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பறவைகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, பெலிக்கான் பறவைகள் என, 109 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. நவ., மாதம் முதல் ஏப்., வரை, சரணாலயத்தில் தங்கி, முட்டையிட்டு குஞ்சு பொரித்து, குடும்பமாக திரும்புகின்றன. தற்போது சரணாலயத்தில், 4.90 கோடி ரூபாயில் பல்வேறு மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக, சென்னிமலை - ஈரோடு பிரதான சாலை வி.மேட்டுப்பாளையத்தில், சரணாலயத்துக்குள் நுழையும் இடத்தில், மக்களை கவரும் வகையில் நுழைவாயில் அமைக்கும் பணி நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X