கொப்பரை ஏலத்தில் பங்கேற்போர் டோக்கன் பெற யோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரை ஏலத்தில் பங்கேற்போர் டோக்கன் பெற யோசனை

Added : ஜூன் 12, 2020
Share

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வேளாண் விளை பொருட்கள் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம், ஒவ்வொரு வாரமும் புதன், சனி கிழமைகளில் நடந்து வருகிறது. நிர்வாக காரணத்துக்காகவும், விவசாயிகள் வசதிக்காகவும் திங்கள் மற்றும் வியாழக்கிழமை காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணிக்குள் சங்கத்தில் நேரடியாகவோ, தொலைபேசி மூலமோ முன் அனுமதி பெற்று, டோக்கன் பெற்று கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றுள்ள விவசாயிகள் மட்டும், தேங்காய் பருப்புகளை ஏலத்துக்கு கொண்டு வர அனுமதிக்கப்படுவர். இதற்கான தொலைபேசி எண், 96778 93302, 99427 50525. விவசாயிகள், தங்களது தேங்காய் பருப்புகளை தரம் வாரியாக பிரித்து, ஏலம் நடக்கும் நாளுக்கு முந்தைய நாள் காலை, 7:00 மணி முதல் மாலை, 5:00 மணிக்குள் சங்க கிட்டங்கிக்கு எடுத்து வர வேண்டும். கொரோனாவுக்கான ஊரடங்கு நீடிப்பதால், அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்க வேண்டும், என, சங்க மேலாண்மை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X