பொது செய்தி

தமிழ்நாடு

பெருந்துறையில் சூறாவளி காற்றுடன் கொட்டிய மழை: முறிந்த மரங்கள்; உடைந்த கம்பங்கள்; நிரம்பிய சாக்கடை

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

சென்னிமலை: பெருந்துறையில், சூறாவளி காற்றுடன் கொட்டித் தீர்த்த மழையால், பல இடங்களில் மரங்கள் முறிந்தன; சில இடங்களில் கம்பங்கள் உடைந்தன; பல பகுதிகளில், சாக்கடை நிரம்பி, கடைகளுக்குள் கழிவுநீர் புகுந்தது.
பெருந்துறையில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, லேசான காற்றுடன், தூறலாக மழை தொடங்கியது. திடீரென சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது. அரை மணி நேரம் பலத்த காற்றுடனும், அரை மணி நேரம் அமைதியாகவும் மழை கொட்டித் தீர்த்தது. பலத்த காற்றால், பெருந்துறையில் பல பகுதிகளில், சாலையோர மரங்கள் முறிந்து விழுந்தன. குறிப்பாக, பெருந்துறை - காஞ்சிக்கோவில் சாலையில், தாய் நகர் பகுதியில் அரசமரமும், அதன் அருகில் இருந்த வேப்பமரமும் வேருடன் சாய்ந்து, மின் கம்பி மீது விழுந்ததில், கம்பம் உடைந்து சாலையில் விழுந்தது. இதனால் தாய் நகரில், நேற்று மாலை வரை, மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. அதேசமயம் பலத்த மழையால், பல இடங்களில் சாக்கடை நிரம்பி, கடைகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு, பெருந்துறை நகரில் பலத்த காற்றுடன் மழை பெய்ததாக, மக்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X