பொது செய்தி

தமிழ்நாடு

'சென்னையில் 7 நாளில் 10 ஆயிரம் பேர் பாதிப்பர்'

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Chennai, coronavirus, covid 19, chennai news, tamil nadu, tamil nadu news, covid 19 chennai, சென்னை, கொரோனா

சென்னை: 'சென்னையில் அடுத்து வரும், ஒரு வாரத்தில், மேலும், 10 ஆயிரம் பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது' என, சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சென்னையில் தற்போது, 27 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 13 ஆயிரம் பேர், சிகிச்சையில் உள்ளனர். மேலும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தொற்று அறிகுறியுடன் உள்ளனர். தற்போதைய சூழலில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பியுள்ளனர். இதனால், 55 வயதுக்கு உட்பட்ட, முதல் நிலை ஆபத்தில்லாத, 8,000க்கும் மேற்பட்டோர், மாநகராட்சி தனிமைப்படுத்துதல் மையத்திலும், அவர்களின் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.


latest tamil news


இந்நிலையில், அடுத்த ஒரு வாரத்தில், சென்னையில் மட்டும், 10 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக, சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து, சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறியதாவது: சென்னையில் அடுத்து வரும் நாட்களில், தொற்று இரட்டிப்பாகும் சூழலில், ஒரு வாரத்தில் மட்டும், 10 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இனிவரும் நாட்களிலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-ஜூன்-202018:33:27 IST Report Abuse
J.V. Iyer கரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள். வேறு வழி இல்லை. இருப்பவர்கள் இருக்கட்டும்.
Rate this:
Cancel
Balakrishnan Kamesh - tiruvarur,இந்தியா
12-ஜூன்-202014:33:45 IST Report Abuse
Balakrishnan Kamesh போகும் போக்கை பார்த்தால் வைரஸ் பாதித்தவர்களை வெளியில் விட்டு விட்டு பாதிக்காதவர்களை QVARANTINE செய்வது தான் ஒரே வழி என தோன்றுகிறது ..
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
12-ஜூன்-202014:20:19 IST Report Abuse
Ray அடிப்படை தற்காப்பு போதிய இடைவெளி (ஒரு மீட்டர்) இதை கூட கடை பிடிக்க கல்வி பெற்ற சென்னைவாசிகள் யாருக்கும் முடிய வில்லை சுய கட்டுப்பாடு சுட்டுப் போட்டாலும் வராதோ? வீதியெல்லாம் வட்டமோ கட்டமோ போட்டு காட்டினாலும் கடை பிடிக்க தயக்கம் இன்னமும் ஆணென்றும் பெண்ணென்றும் படம் போட்டுக் கொண்டிருக்கிறோமே வெட்கப் படவேண்டிய நிலை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X