அடிப்படை வசதிக்கு ஏங்கும் இருளர் சமுதாய மக்கள்| Dinamalar

அடிப்படை வசதிக்கு ஏங்கும் இருளர் சமுதாய மக்கள்

Added : ஜூன் 12, 2020
Share
அரூர்: டி.ஆண்டியூரில், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என இருளர் இன மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேடகட்டமடுவு பஞ்.,க்கு உட்பட்ட டி.ஆண்டியூரில், 100க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு திறந்தவெளி கிணற்றிலிருந்து, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை

அரூர்: டி.ஆண்டியூரில், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என இருளர் இன மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேடகட்டமடுவு பஞ்.,க்கு உட்பட்ட டி.ஆண்டியூரில், 100க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு திறந்தவெளி கிணற்றிலிருந்து, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது, நிலவும் வறட்சியால், திறந்தவெளி கிணறு வறண்டு போயுள்ளது. இதனால், இங்குள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டாரிலிருந்து கிடைக்கும் தண்ணீரை, கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது போதியளவில் இல்லாததால், மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், ஒகேனக்கல் குடிநீரும் வினியோகம் செய்யப்படுவதில்லை. குடியிருப்பு பகுதியில், இரண்டு கம்பங்களில் மட்டும், மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதால், இரவில் மக்கள் இருட்டில் செல்லும் நிலையுள்ளது. எனவே, குடிநீர், மின்விளக்கு, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என இருளர் இனமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X