சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காளை உயிரிழக்க காரணமாக இருந்த இளைஞர்கள் குறித்த வீடியோ 'வைரல்'

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: காளை உயிரிழக்க காரணமாக இருந்த, இளைஞர்கள் குறித்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி நகர், பாப்பாரப்பட்டியில் வசிப்பவர் வெற்றிவேல், 35; வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வரும் அவர், காளை ஒன்றை வளர்த்து வந்தார். இக்காளை எருதுவிடும் விழாக்களில் பல பரிசுகளை வென்றுள்ளது. கடந்த, 5ல் தன் நிலத்தில் உள்ள மரத்தில் காளையை கட்டி வைத்துவிட்டு பணிக்கு சென்றார். மாலை வந்து பார்த்தபோது, மாட்டின் கொம்புகள் உடைந்தும், வாயில் ரத்த காயங்களுடன் இருந்தது. காளை மரத்தில் மோதி, காயம் ஏற்பட்டிருக்கும் என நினைத்தார். சிகிச்சை அளித்தும், காளை இறந்ததால், இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்தனர். சில நாட்களுக்கு முன், வெற்றிவேலுக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் வீடியோ ஒன்று வந்தது. அதில், மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் சீண்டியதில், ஆக்ரோஷமடைந்த காளை, மரக்கிளையில் மோதி அதன் கொம்புகள் சிக்கி உடைந்து, வாய், மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டுகிறது. இதை, இளைஞருடன் வந்த மற்றவர் மொபைல்போனில் வீடியோ எடுக்க, போதையில் மற்றொருவர் கீழே விழுந்து கிடப்பது போல், காட்சி இருந்தது. இதைப்பார்த்து வெற்றிவேல் அதிர்ச்சியடைந்தார். அந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் தொடர்புடைய இளைஞர்கள் மீது, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்களும், மாடுபிடி வீரர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X