சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாய நிலத்தில் புகுந்த யானைகள்; குச்சிக்கிழங்கு, சாம்பல் பூசணி சேதம்

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

மேட்டூர்: யானைகளால், குச்சிக்கிழங்கு, சாம்பல் பூசணி சேதமானது. சேலம் மாவட்டம், கொளத்தூர், ஆலமரத்துப்பட்டி ஊராட்சி, ஏழரைமத்திக்காடு, புருசமரத்துக்காட்டில், விவசாயிகள் குச்சிக்கிழங்கு, சாம்பல் பூசணி, பருத்தி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். நேற்று காலை, 5:00 மணிக்கு, ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி வனச்சரகம், பச்சமலையில் இருந்து, ஐந்து யானைகள், புருசமரத்துக்காடு விவசாய நிலத்தில் புகுந்தது. அப்பகுதி விவசாயிகள் பாலு, சுப்ரமணியன் நிலத்தில் புகுந்த யானைகள், குச்சிக்கிழங்கு, சாம்பல் பூசணியை சேதப்படுத்திவிட்டு, அங்கேயே நின்றிருந்தன. மேட்டூர் வனத்துறையினர், வானவெடி வெடித்து, ஓசை எழுப்பி, காலை, 10:30 மணிக்கு, யானைகளை, வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X