சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் 3 பவுன் நகை திருட்டு; சிறுவன் கைது

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

கரூர்: உறவினர் வீட்டில் நகை திருடியதாக, 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர், சணப்பிரட்டியை சேர்ந்தவர் மணிவண்ணன், 46. இவர், ஆட்டோ டிரைவர். கடந்த, 9 ல் தனது வீட்டிலிருந்த, மூன்று பவுன் தங்க நகையை காணவில்லை என, பசுபதி பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவரது வீட்டுக்கு வந்து சென்றவர்களிடம் விசாரணை நடத்தினர். இவர்களது உறவினரான, புஞ்சை தோட்ட குறிச்சி பகுதியில் வசித்து வரும், 14 வயது சிறுவன் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வீட்டிற்கு வந்த போது, மூன்று பவுன் நகையை எடுத்து சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார். நகை திருடிய வழக்கு தொடர்பாக சிறுவனை, போலீசார் கைது செய்து, தொடர் விசாரைணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X