சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி ஆவணம் தயாரித்து பட்டா மாற்றம் செய்தவர் கைது

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

குளித்தலை: போலி ஆவணங்கள் தயார் செய்து, இரண்டு ஏக்கர் நிலத்தை பட்டா மாற்றம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மேலவாளியம்பட்டியை சேர்ந்தவர் தெப்பாநாயக்கர் மகள் பொம்மக்கா. இவருக்கு பாப்பம்மாள் என்ற அக்கா, பெரிய பொம்மாநாயக்கர் என்ற சகோதரர் உள்ளனர். இவர்களுக்கு, இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 1984ல், பெரிய பொம்மாநாயக்கர் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், மேலவாளியம்பட்டியை சேர்ந்த பாக்கியராஜ், 35, என்பவர் பெரியபொம்மாநாயக்கர் பெயரில் போலியாக ஆவணங்கள் தயார் செய்து, அவரது பெயரை, 2011ல், தனது குடும்ப அட்டையில் சேர்த்துள்ளார். பின்னர், போலி ஆவணங்கள் தயார் செய்து, குளித்தலை தாசில்தார் உட்பட அதிகாரிகளின் கையெழுத்து மற்றும் முத்திரைகளை போட்டு, பொம்மக்கா, பாப்பம்மாள், பெரியபொம்மாநாயக்கர் ஆகியோருக்கு சொந்தமான, இரண்டு ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் ஆதரவுடன், பாக்கியராஜ் தனது பெயரில் பட்டா பெற்றுள்ளார். இது குறித்து, 2013ல் அப்போதைய கலெக்டர் மற்றும் போலீசாரிடம் பொம்மக்கா புகார் செய்தார். இதையடுத்து பாக்கியராஜின் பட்டாவை கடந்த, 2013 டிச., 27 ல், அப்போதிருந்த குளித்தலை ஆர்.டிஓ., ரத்து செய்து உத்தரவிட்டார். ஆனால், போலியாக ஆவணங்கள் தயார் செய்து நிலத்தை அபகரித்த, பாக்கியராஜ் மீது வருவாய்துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், மதுரை ஐகோர்ட் கிளையில் நடவடிக்கை எடுக்க கோரி, பொம்மக்கா மனு தாக்கல் செய்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில், தோகைமலை போலீசார் கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இதில், பாக்கியராஜ் போலி ஆவணங்கள் தயார் செய்து, குளித்தலை தாசில்தார் உட்பட பல அதிகாரிகளின் கையெழுத்து மற்றும் முத்திரைகளை போட்டு, இரண்டு ஏக்கர் நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் பாக்கியராஜை தோகைமலை போலீசார் கைது செய்து, குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X