பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் புகார் தரும் இடமல்ல: டி.எஸ்.பி.,

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, கோட்டைமேட்டில், சில மாதங்களுக்கு முன், நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. தற்போது, இந்த அலுவலகம் திறக்கப்படுவதில்லை. போலீசாரும், எந்த பிரிவு சாலையிலும் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுவதை காண முடியவில்லை என, மக்கள் கருத்து தெரிவித்தனர். விபத்து தொடர்பாக, புகார் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதுகுறித்து, திருச்செங்கோடு டி.எஸ்.பி., சண்முகம் கூறியதாவது: நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் புகார் தரும் இடமல்ல. போக்குவரத்து பாதுகாப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்வர். அலுவலகத்தை பூட்டி விட்டு செல்லும் நிலை ஏற்பட்டாலும், அவ்வாறு செல்வதும் உண்டு. எஸ்.பி., உத்தரவுப்படி அந்த அலுவலகம் முன், போக்குவரத்து போலீசார் பணிகள் குறித்து போர்டு வைக்கப்படும். புகாரை, குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் மட்டுமே தரவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X