பொது செய்தி

தமிழ்நாடு

தி.கோடு தெப்பக்குளம் கட்டுமான பணி ஆய்வு

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

திருச்செங்கோடு: திருச்செங்கோடு, ஆனங்கூர் சாலையில், 400ஆண்டுகள் பழமை வாய்ந்த தெப்பக்குளம் உள்ளது. திருச்செங்கோடு நகர மற்றும் சுற்றுப்பகுதி மக்களின் குடிநீர் தேவை, இக்குளத்தின் மூலம் பூர்த்தி செய்யப்பட்டது. சின்ன ஓங்காளியம்மன் கோவில் பூமிதி விழாவில், குண்டம் இறங்கும் பக்தர்கள் தெப்பக்குளத்தில் நீராடிய பின்னர் தான், குண்டம் இறங்குவர். இந்நிலையில், தெப்பக்குளத்தின் படிக்கட்டுகள் பலம் இழந்து, மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்தது. சிறப்பு தன்னிறைவுத் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் குளத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு, பொது மக்களின் பங்காக, 25 லட்சம் ரூபாய் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, குளத்தை சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. ஆனால், பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று, தெப்பக்குளத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். தாசில்தார் கதிர்வேல், நகராட்சி ஆணையாளர் முஸ்தபா கமால் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X