வேடந்தாங்கல் எல்லை பிரச்னை :வனத்துறை முரண்பட்ட தகவலால் சந்தேகம்

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (5) | |
Advertisement
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய எல்லை மறுவரையறை தொடர்பாக, வன விலங்கு வாரியத்திடம் தெரிவித்துள்ள தகவலுக்கும், வன உயிரின காப்பாளர் அறிக்கைக்கும் வேறுபாடு உள்ளதாகவும், அது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில் உள்ள, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய எல்லையை, மறுவரையறை செய்யும்
Vedanthangal sanctuary, Vedanthangal bird sanctuary, tamil nadu news, tn news, dinamalar news, வேடந்தாங்கல், எல்லை பிரச்னை, வனத்துறை, முரண்பட்ட தகவல், சந்தேகம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய எல்லை மறுவரையறை தொடர்பாக, வன விலங்கு வாரியத்திடம் தெரிவித்துள்ள தகவலுக்கும், வன உயிரின காப்பாளர் அறிக்கைக்கும் வேறுபாடு உள்ளதாகவும், அது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில் உள்ள, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய எல்லையை, மறுவரையறை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு, ஆரம்ப நிலையிலேயே, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பொது மக்கள், பறவை ஆர்வலர்கள் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், தமிழக தலைமை வன உயிரின காப்பாளர், ஜூன், 9ல் அறிக்கை வெளியிட்டார்.


latest tamil news


அறிக்கையில், அவர் கூறியிருப்பதாவது:வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய பகுதி, தற்போது உள்ள, 5 கி.மீ., சுற்றளவுக்கு தொடர்ந்து இருக்கும். முதல், 1 கி.மீ., பிரதான பகுதி; அடுத்த, 2 கி.மீ., வெளிச்சுற்று பகுதி; அடுத்த, 2 கி.மீ., சுற்றுச்சூழல் முக்கியத்துவ பகுதியாக இருக்கும்.இவ்வாறு, கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:தேசிய வன விலங்கு வாரியத்தில், வனத்துறை தாக்கல் செய்த ஆவணத்தில், 'உள்ளூர் மக்களின் நலனுக்காக, 5 கி.மீட்டராக உள்ள பறவைகள் சரணாலய எல்லையை, 3 கி.மீட்டராக மறுவரையறை செய்கிறோம்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.அதில், தற்போது வெளிச்சுற்று பகுதியாக உள்ள, கடைசி, 2 கி.மீ., பகுதி, சுற்றுச்சூழல் முக்கியத்துவ பகுதியாக மாற்றப்படும் என்று குறிப்பிடவில்லை.தலைமை வன உயிரின காப்பாளர் அறிக்கைக்கும், டில்லியில் தாக்கல் செய்யப்பட்ட வனச்சரகர் அறிக்கைக்கும் வேறுபாடு உள்ளது.தேசிய வன விலங்கு வாரியத்திடம் ஒரு கருத்தையும், பத்திரிகைகளுக்கு ஒரு கருத்தையும், வனத்துறை தெரிவிக்கிறதா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.தமிழக அரசு தலையிட்டு, இப்பிரச்னையை தீர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
12-ஜூன்-202013:31:05 IST Report Abuse
Rameeparithi இயற்கையை அதன் வழியிலே இயல்பாக இருக்க விடுவோம் இல்லையேல், சுனாமி / கோரானா படிப்பினையை தாண்டி நாம் பாடம் கற்கும் நிலையை சந்திக்க நேரிடும் மற்ற ஜீவன்களையும் இந்த மண்ணில் ஜீவிக்க விடுவோம்
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
12-ஜூன்-202012:12:28 IST Report Abuse
மணி மருந்து கம்பெனிக்கு இடமா கிடைக்காது? இதுக்குள்ள போயி நுழையறானுங்க பாரு..
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
12-ஜூன்-202012:11:59 IST Report Abuse
Lion Drsekar நீதிமன்றம் தானாக முன்வந்து மக்களை காப்பாற்றினால் மட்டுமே வாழ்வு. இல்லையென்றால் வள்ளுவர்கோட்டம் போல் கோவில் குளங்கள் போல், நதிகள் போல், குடிநீர் ஆதாரம்போல், உருமாறிவிடும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X