கொரோனாவை ஒழித்துக் கட்டிய 9 நாடுகள்

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (25) | |
Advertisement
வெலிங்டன்: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை உலகளவில் 75.9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 4.23 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 38.4 லட்சம் பேர் பூரண குணமடைந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில் இதுவரை 9 நாடுகள் கொரோனா பிடியில் இருந்து தப்பித்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க
Corona Free, Nations, COVID-19, New zealand, Covid Free, கொரோனா, வைரஸ், இல்லாத, நாடுகள், நியூசிலாந்து

வெலிங்டன்: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை உலகளவில் 75.9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 4.23 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 38.4 லட்சம் பேர் பூரண குணமடைந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில் இதுவரை 9 நாடுகள் கொரோனா பிடியில் இருந்து தப்பித்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க நாடாக நியூசிலாந்து உள்ளது.


நியூசிலாந்து


கொரோனா பிடியில் இருந்து தப்பிய நாடுகளில் குறிப்பிடத்தக்க நாடாக நியூசிலாந்து உள்ளது. வெறும் 48.9 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடான இங்கும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சுமார் 75 நாட்கள் ஊரடங்கை கடுமையாக பின்பற்றப்பட்டது. மேலும், அந்த காலக்கட்டத்தில் தொடர் பரிசோதனைகளும் அதற்கேற்ற துரித சிகிச்சைகளும் கொரோனா அரக்கனிடம் இருந்து எளிதில் வெல்ல உதவியது. நியூசிலாந்தில் கடைசியாக மே 22ம் தேதிக்கு பிறகு ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை. கடைசி நோயாளியும் ஜூன் 8ம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். மொத்தம் 22 இறப்புகள் உட்பட 1,504 பேர் பாதிப்புகளுடன் கொரோனா வென்ற நாடானது நியூசிலாந்து.


தான்சானியா


கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கடந்த ஆறு வாரங்களுக்கு முன், புதிதாக கொரோனா பாதித்தவர்களின் விவரங்கள் வெளியிடுவதை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடவுளின் அருளால் கொரோனாவை ஒழித்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் ஜான் மகுபுலி சமீபத்தில் அறிவித்தார். 509 பேருக்கு மேல் பாதிக்கப்படவில்லை என அதிபர் திட்டவட்டமாக கூறினாலும் உண்மையில் கொரோனா ஒழிந்துவிட்டதா என்ற சந்தேகம் இருக்க தான் செய்கிறது.


latest tamil news
வாடிகன்குட்டி நாடான வாடிகனில் மொத்தம் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கடைசி நோயாளியும் குணமடைந்ததை அடுத்து கடந்த 4ஆம் தேதி கொரோனா இல்லாத நாடாக அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் மாட்டோ ப்ருனி அறிவித்தார். கொரோனா முழுவதும் ஒழிந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னரே செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை நடத்தினார்.


பிஜி தீவு


தென் பசிபிக் தீவான பிஜியில் 9 லட்சம் பேர் வாழ்கின்றனர். அங்கு இதுவரை 18 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்தி, எல்லையில் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து விட்டனர். தொடர்ந்து 45 நாட்களாக புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படாததால், 100 சதவீதம் குணமடைந்துவிட்டதாக பிரதமர் பிராங் பைனிமாரமா அறிவித்தார்.


மான்டிநெக்ரோ


ஐரோப்பிய நாடான மான்டிநெக்ரோவில் மொத்தம் 324 பேர் பாதிக்கப்பட்டு 9 பேர் உயிரிழந்தனர். அந்நாடு, முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 69வது நாளில் கொரோனாவை ஒழித்து சாத்தியப்படுத்தியுள்ளது. கொரோனாவை ஒழித்த முதல் ஐரோப்பிய நாடாக மான்டிநெக்ரோ திகழ்கிறது.


latest tamil news

சீசெல்ஸ்


இந்தியப் பெருங்கடலில் 115 குட்டி தீவுகளைக் கொண்ட சீசெல்ஸ் கடந்த மே 18ம் தேதியே கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. அங்கு, வெறும் 11 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.


கிட்ஸ் அண்டு நெவிஸ்


மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள கிட்ஸ் அண்டு நெவிஸில் மொத்தமே 15 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து நோயாளிகளும் கடந்த 19ம் தேதியே குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.


கிழக்கு திமோர், பபுவா நியூகீனி


கிழக்கு திமோர் மற்றும் பிசிபிக் நாடான பபுவா நியூகீனி ஆகிய இரண்டு நாடுகளிலம் தலா 24 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். அவர்களும் முழுவதுமாக குணமடையவே கொரோனா இல்லாத நாடுகளானது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18-ஜூன்-202016:51:57 IST Report Abuse
skv srinivasankrishnaveni சில அரசியல்வியாதிகளால் மோடிஜி எதுசெய்தாலும் கேவலம் என்று அந்தக்கட்சிகளில் ஜால்றாகலெதான் ஆட்டம்போடுறானுக தன் கட்சியிலே ஒருவன் செத்தால் கூட சாவுக்குபோவாமல் ஒதுங்கி நின்னு துக்கம் விஜாரிப்பான் தைரியபுலி போல இவனெல்லாம் சி எம் ஆனால் தமிழ்நாடாது அம்போ சிசம்போ தான் ஆவும்
Rate this:
Cancel
sathyam - Delhi,இந்தியா
14-ஜூன்-202010:32:30 IST Report Abuse
sathyam இங்கு தலைமை குறித்து கருத்து சொல்லும் பயல்கள் குட்டி , குட்டி தீவுகளை இந்தியாவை ஒப்பிட்டு பேசி அரை குறை என்பதை நிரூபிக்கும் அரை வேக்காடுகள் . நூற்றி முப்பத்தந்து கோடி வாழும் மிக பெரிய நாடு , அதிலும் , படிக்காத பப்லிக்கும் , அடங்காத தப்பிலிக்கும் உள்ள விசித்ர நாடு , வந்துட்டாங்க
Rate this:
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
12-ஜூன்-202016:10:04 IST Report Abuse
chakra திறமையான தலைமை இருந்தால் கொரோனவை கட்டுப்படுத்த முடியும் உதாரணம். சீனா , ஸ்பெயின் , ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜப்பான் எப்படி தலைமை இருக்க கூடாது என்பதற்கு உதாரணம் பிரேசில் , இந்தியா , அமெரிக்கா
Rate this:
Velan - Chennai,இந்தியா
12-ஜூன்-202019:45:27 IST Report Abuse
VelanLeader ship is not a problem here. Only problem with irresponsible people.....
Rate this:
chakra - plano,யூ.எஸ்.ஏ
12-ஜூன்-202021:42:56 IST Report Abuse
chakraநல்ல தலைமை பண்பு என்றால் என்ன என்று சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா தலைவர்களின் நடவடிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் . சட்டி மாதிரி மேக் அப்ப போட்டு உட்கர்ந்திருப்பது நல்ல தலைமை அல்ல...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜூன்-202002:10:35 IST Report Abuse
தமிழவேல் வேலன், மோடியின் கொரோனா திட்டங்களினால் கட்டுக்குள் உள்ளது, பாதிப்பு இல்லை, இறப்பு குறைவு என்று நம் பத்திரிகையில் பலமுறை வந்துள்ளது. இப்போது, உயர்ந்து வரும் சமையத்தில் மக்கள் மீதும், மாநிலங்கள் மீதும் பழி சுமத்தப் படுகின்றது....
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
14-ஜூன்-202010:10:27 IST Report Abuse
Amal Anandanதலை சரியாய் இருந்தால் வால் ஆடாது. இது பழமொழி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X