இந்தியாவில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா: பாதிப்பு 2.97 ஆக அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா: பாதிப்பு 2.97 ஆக அதிகரிப்பு

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (4)
Share
coronavirus death toll, covid 19, health, coronavirus india,
கொரோனா, கொரோனாவைரஸ்,  இந்தியா, கோவிட்-19, பாதிப்பு, தொற்று, அதிகரிப்பு, உயர்வு,  உயிரிழப்பு, பலி

புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.97 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 8,498 ஆக உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 10,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 195 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.


latest tamil news




கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 396 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 498 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X