பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்வர் இபிஎஸ் தண்ணீர் திறந்து வைத்தார்

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சேலம்: காவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்வர் இபிஎஸ் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.காவிரி டெல்டாவின் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட 12 மாவட்டங்கள் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதிக்காக மேட்டூர் அணையையே நம்பி உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ம்தேதி காவிரி
மேட்டூர், அணை, காவிரி, டெல்டா, பாசனம், முதல்வர், இபிஎஸ், திறப்பு, EPS, Mettur Dam, cauvery delta cross cultivation, Palanisamy, Tamil Nadu, TN news, farmers, agriculture, salem, water,  Edappadi Palanisamy,  Salem, Namakkal, Erode, Trichy, Karur, Perum Balur, Tanjore, Thiruvarur, Nagapattinam, Pudukkottai.

சேலம்: காவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்வர் இபிஎஸ் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.

காவிரி டெல்டாவின் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட 12 மாவட்டங்கள் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதிக்காக மேட்டூர் அணையையே நம்பி உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ம்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இதுவரை 15 முறை ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் போதிய நீர் இருந்ததால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.


latest tamil newsகடந்த 12 ஆண்டுகளில் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், குறித்த தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டி.எம்.சி.யாகவும் உள்ளது. இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்வர் இபிஎஸ் இன்று தண்ணீர் திறந்து வைத்தார். இதனால், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
12-ஜூன்-202014:20:50 IST Report Abuse
Thiagarajan Kodandaraman C M GOOD ATTITUDE AND PUBLIC WELFARE THINKING.Congrats C M. LONG LIVE
Rate this:
Cancel
12-ஜூன்-202013:49:15 IST Report Abuse
ஆரூர் ரங் நடந்தாய் வாழி காவேரி. நானிலம் செழிக்கட்டும். கர்னாடக கெமிக்கல் நுரை நம்ம சாயக் கழிவுநீர் கலக்காத காவிரி நீர் எப்போது டெல்டாவுக்குக் கிட்டும் ?
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
12-ஜூன்-202013:23:57 IST Report Abuse
Rameeparithi 12 ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறப்பது மிக்க மகிழ்ச்சி விவசாயம் வீழின் வையகம் அழியும் நீர் மேலாண்மையை கடைப்பிடிக்க வகை செய்து வழி நடப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X