கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டமில்லை: ஐகோர்டில் தமிழக அரசு தகவல்

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு நிறைவடைந்து, ஜூன் 1 முதல் தொடங்கிய 5ம் கட்ட ஊரடங்கில், ‛அன்லாக்-1' என்ற பெயரில் பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில்,
Chennai, Full Lockdown, Tamilnadu Govt, Lockdown, High Court, Tamil nadu, complete lockdown, TN news, madras HC, coronavirus, corona, covid-19, corona outbreak, covid-19 pandemic, coronavirus cases, corona spread,corona patients, சென்னை, ஐகோர்ட், உயர்நீதிமன்றம், முழு, ஊரடங்கு,

சென்னை: சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு நிறைவடைந்து, ஜூன் 1 முதல் தொடங்கிய 5ம் கட்ட ஊரடங்கில், ‛அன்லாக்-1' என்ற பெயரில் பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 9 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகளை பதிவு செய்து வந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 10,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் பாதிப்பு கட்டுக்கடங்காமல் உச்சத்தை பதிவு செய்து வருகிறது. இதனால், ஊரடங்கினை கடுமையாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்தான வழக்கை நேற்று (ஜூன் 11) விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தரி மற்றும் ஆர்.சுரேஷ்குமார், கொரோனா அதிகரித்து வருவதால் சென்னையில் ஊரடங்கை கடுமையாக்கும் திட்டம் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.


latest tamil newsஇதுதொடர்பாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அளித்த விளக்கம்:
சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை. சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கான இ-பாஸ் சேவை நிறுத்தப்படவில்லை; நிறுத்தப்படுவதாக கூறுவது வதந்தியே. நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவக்குழுவினரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு தமிழக அரசு விளக்கம் அளித்தது. இதனையடுத்து இந்த வழக்கு ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜூன்-202016:12:07 IST Report Abuse
ஆப்பு அதிவேக பரவலுக்கு அன்லாக் 1 தான் காரணம். ஆனா, அதை மாநிலங்கள் தலையில் கட்டி விடப் பார்க்குறார்கள். வெளியில் என்னவோ, பொருளாதாரத்தை ஒசத்த எல்லாத்தையும் தொறக்குறோம்னு ஒரு பிரச்சாரம். கடைசியில் கொரோனா, பொருளாதாரம் ரெண்டையும் கோட்டை விடப் போறோம்.
Rate this:
Cancel
Naresh Giridhar - Chennai,இந்தியா
12-ஜூன்-202015:57:49 IST Report Abuse
Naresh Giridhar ஹரிச்சந்திர பிரபு சொல்லிட்டாங்க, மக்களே கேளுங்கள். அதிகாரிகளின் லோக்கல் அரசியலை கவனிப்பதிலும் ஸ்டாலின் என்ன செய்கிறார் என்று உளவு பார்ப்பதிலும் தான் நேரம் செலவாகிறது. கேவலம் .
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
12-ஜூன்-202014:24:05 IST Report Abuse
S. Narayanan ஊரடங்கை மீண்டும் அமுல் படுத்துவதால் கொரோனா கட்டுக்குள் வராது. மாறாக மக்களுக்கு அசௌகரியமும் வருமானமின்மையும் பசி பட்டினியும் தான் ஏற்படும். கொரோனாவை ஒழிக்க வேண்டுமானால் மக்களுக்கு தேவையான மாஸ்க் மற்றும் கையுறைகள் கொடுத்து சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருத்தல் மற்றும் சமூக இடைவெளியின் அவசியத்தை பாமர மக்களுக்கு புரியும் விதத்தில் எடுத்து சொல்லி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். கட்டுப்பாடுகளை மீறுவோரின் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை முடக்க வேண்டும். மேலும் முக கவசம் அணியாதவர்களிடம் ஆயிரம் ருபாய் அபராதம் வசூலிக்க வேண்டும். கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தார் பயம் கொள்ளாதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனினில் பயத்தினால் பல மக்கள் அச்சப்படுகிறார்கள். அச்சத்தினாலேயே பல மக்கள் உயிர் இழக்கிறார்கள். கொரோனாவினால் இறந்தவர்களை கண்டாலே மக்கள் பீதி அடிக்கிறார்கள் . இந்த பயத்தை போக்க வேண்டும். சித்தா ஆயுர் வேத மருந்துகளை இலவசமாக ஒவ்வொரு முக்கிய இடங்களிலும் மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இவற்றை செய்தால் கொரோனா விரைவில் கட்டுக்குள் வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X