விலங்குகளைவிட மோசமாக நடத்தப்படும் கொரோனா நோயாளிகள்: உச்சநீதிமன்றம் வேதனை

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
டில்லி, கொரோனா, கொரோனாவைரஸ், உச்சநீதிமன்றம், சுப்ரீம் கோர்ட், நீதிபதிகள், வேதனை, SC, Supreme court, covid-19, coronavirus, covid-19 patients, coronavirus outbreak, corona updates, animals, corona patients treatment, delhi government, corona treatment, india, top court

புதுடில்லி: நாட்டின் தலைநகர் டில்லியில், கொரோனா நோயாளிகள், விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுவதாக டில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த நீதிமன்றம் கூறுகையில், டில்லியில், கொரோனா நோயாளிகள் மோசமாக நடத்தப்படுகின்றனர். குப்பை தொட்டியில் இருந்து உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தினமும் நோயாளிகள் இறக்கும் நிலையில், அவர்களை கவனிக்க ஒருவர் கூட இல்லை. சென்னை மற்றும் மும்பையில், பரிசோதனை எண்ணிக்கை 16 ஆயிரத்தில் இருந்து 17 ஆயிரமாக அதிகரித்துள்ள நிலையில், டில்லியில் மட்டும் 7 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைத்தது ஏன்?


latest tamil newsடில்லியின் நிலைமை, கொடூரமாகவும், மோசமாகவும், பரிதாபமாகவும் உள்ளது. மருத்துவமனைகளில் உயிரிழப்பவர்களின் உடல்களை பற்றி கவலைப்படாத மாநிலமாக டில்லி உள்ளது. நோயாளிகள் இறப்பு குறித்து உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை. சில நேரங்களில், இறுதிச்சடங்கில் கூட நோயாளிகள் கலந்து கொள்ள அனுமதிப்பது இல்லை.
நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற பல இடங்களில் அலைகின்றனர். ஆனால், ஏராளமான படுக்கைகள் காலியாக உள்ளன. டில்லியில் உள்ள மருத்துவமனையில் காத்திருப்பு அறை லாபிக்களில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், வார்டுகளில் படுக்கைகள் காலியாக உள்ளன. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்திய அளவில், கொரேனா பாதிப்பில் தலைநகர் டில்லி 3வது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலையில், அங்கு 34, 687 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,089 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shake-sphere - India,இந்தியா
12-ஜூன்-202019:50:14 IST Report Abuse
 Shake-sphere ஒரேயடியாய் தாங்குகிறார்கள் அவரவர் உடல் நிலையில் அவரவர்களுக்கு அக்கறையில்லையா? எல்லாவற்றையும் மக்கள் வரிப்பணத்தில்தான் செய்ய வேண்டுமா? இன்றைய தேதியில் பொதுமக்கள் எந்த நல்ல விஷயத்தையும் கேட்டுக்கொள்ள தயாராக இல்லை அதனால் அரசியல் வியாதிகள் தாங்கள் பங்கு போட்டது போக மீதியைத்தான் மக்களுக்கு பிச்சையிடுகிரகள் செலவு செய்ய முடியாத ஏழைகளுக்கு செலவிடலாம் தப்பு இல்லை
Rate this:
Cancel
nan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜூன்-202018:02:28 IST Report Abuse
nan இவர் கிட்ட அரசியல் டிப்ஸ் கேட்டு கமல் கட்சி ஆரம்பிச்சாரா .அப்ப சரி விளங்கிடும்
Rate this:
Cancel
12-ஜூன்-202016:42:06 IST Report Abuse
Ganesan Madurai சும்மாவா சொன்னாக "உச்ச நீதிமன்றம்" ன்னு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X