நேபாள போலீசார் சுட்டதில் இந்தியர் பலி : எல்லையில் பதற்றம்

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
நேபாளம், போலீசார், துப்பாக்கிச்சூடு, எல்லை, பதற்றம், india, nepal, killed, injured, firing, Indo-Nepal border, Bihar, patna,

பாட்னா: இந்தியா உடனான எல்லை பிரச்னைக்கு மத்தியில் ,நேபாள போலீசார் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் ஒருவர் பலியானதை அடுத்து எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்திய - நேபாள எல்லையருகே பீஹார் மாநிலம் சீதாமர்கி அருகே நேபாள போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் திகேஷ் குமார் (25) என்பவர் உயிரிழந்தார். மேலும் கை, கால்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயமடைந்த உமேஷ் ராம், உதய் தாக்கூர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு இந்தியரை நேபாள போலீசார் கைது செய்துள்ளனர். 'இந்தியர் ஒருவர் நேபாள பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்வது தொடர்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் 'என துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து டி.ஜி எஸ்.எஸ்.பி குமார் ராஜேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.


latest tamil news


துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது எஸ்.எஸ்.பி மற்றும் லால்பண்டி உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேபாள ராணுவம் நாராயண்பூர் எல்லையில் முகாமிட்டுள்ளது.

மற்றொருவர் கூறுகையில், சத்ருகன் ராய் என்பவர் நேபாளத்தின் எல்லை கிராமத்தில் அமைந்துள்ள அவரது மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இன்று காலை எல்லையில் உள்ள நேபாள போலீசாருடன் வாக்குவாதம் செய்துள்ளார். அவரை நேபாள போலீசார் அடித்து உதைத்துள்ளனர். தொடர்ந்து அருகில் உள்ள கிராமத்தினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதனையடுத்து நேபாள போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. 17 முறை நேபாள போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.


latest tamil news




புதிய வரைபட மசோதா நாளை ஓட்டெடுப்பு

இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள லிம்பியதுரா, காலாபாணி, லிபுலேக் ஆகிய பகுதிகளுக்கு நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த பகுதிகள், உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என இந்தியா அறிவித்துள்ளது. இதனிடையே இந்த மூன்று பகுதிகளையும் சேர்ந்து நாட்டின் புதிய வரைபடத்தை தயார் செய்து நேபாளம் வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், புதிய வரைபடம் தொடர்பான அரசமைப்பு சட்டத்திருத்த மசோதா நேபாள நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நாளை நடக்கும் நாடாளுமன்ற சிறப்பு அமர்வில், புதிய வரைபடம் தொடர்பான ஓட்டெடுப்பு நடத்தி மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
18-ஜூன்-202010:06:32 IST Report Abuse
Amirthalingam Shanmugam நாட்டின் எல்லைகளை, எல்லையோர நமது குடிமக்களையும் பாதுகாப்பதிலும் ,பராமரிப்பதிலும், நமது கவனம் ,அணுகுமுறை மாற்றங்கள் தீவிரப்படுத்தவேண்டும்.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜூன்-202023:28:24 IST Report Abuse
தமிழ்வேல் pakkam thavari kament thanthu vitten. Sorry
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜூன்-202023:27:12 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ எதுக்கு ரெடிமேடு சாப்பாட்டுக்கு அனுமதி குடுக்கணும் ? டாஸ்மாக்கை திறக்க எதிர்த்தால், அதுக்கு மட்டும் சாராய ஆலையை முடனும்னு சொல்லல ? சீனா சாமானை வங்கதேன்னு சொல்றதுக்கு பதில், எல்லா கதவையும் அவன் சாமானுக்கு தொறந்து வைக்கிறதுக்கு பதிலா, இறக்குமதி செய்யாதேன்னு கேட்கவேண்டியதுதானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X