புதுடில்லி: இந்தியா மற்றும் அமெரிக்காவின் டிஎன்ஏ.,வில் இருந்த சகிப்புத்தன்மை சகிப்புத்தன்மை மாயமாகிவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
அமெரிக்க முன்னாள் தூதர் நிக்கோலஸ் பர்னசுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் ராகுல் பேசியதாவது: நமது சகிப்புத்தன்மை அமைப்பால், இந்தியா, அமெரிக்கா இடையிலான நட்பு சிறப்பாக உள்ளது. நாம் சகிப்புத்தன்மை மிக்க நாடுகள். நமது டிஎன்ஏ.,வில் சகிப்புத்தன்மை உள்ளது.

நாம் புது கொள்கைகளை ஏற்று கொள்வோம். திறந்த மனதுடன் இருப்போம். ஆனால், ஆச்சர்யமாக தற்போது டிஎன்ஏ மாயமாகியுள்ளது. இதனை நான் வருத்தத்துடன் கூறுகிறேன். இது போன்ற சூழலை நான் பார்த்தது இல்லை. அமெரிக்காவிலும் பார்த்தது இல்லை. இந்தியாவிலும் பார்த்தது இல்லை. அமெரிக்காவில், ஆப்ரிக்கர்கள் - அமெரிக்கர்கள் என பிரித்தவர்கள், இந்தியாவில் இந்துக்கள்- முஸ்லிம்கள்- சீக்கியர்கள் என பிரித்தவர்கள் நாட்டை பலவீனப்படுத்திவிட்டனர். ஆனால், அவர்கள் தேசியவாதி என அழைத்து கொள்கின்றனர்.
கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பல்வேறு துறைகள் என விரிவாக இருந்த உறவு, தற்போது பாதுகாப்பு துறையில் மட்டும் கவனம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE