‛10 லட்சம் அமெரிக்கர்களில் 10 பேர் இனவாதிகள்' கருத்து; டிரம்ப் காட்டம்

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Trump, Falsely Labeling, Warns, Racists, us, america, donald trump, george floyd, floyd death, டிரம்ப், கருப்பினத்தவர்கள், விமர்சனம், கண்டனம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 10 லட்சம் அமெரிக்கர்களில் 10 பேர் இனவாதிகள் என்ற கருப்பின மக்களின் விமர்சனத்துக்கு டல்லாஸ் கூட்டத்தில் கடுமையான எதிர்ப்பு மற்றும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ் பிளாயிட் படுகொலை பல மேலை நாடுகளில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மினேசோட்டா மாகாணத்தில் இருந்து பரவிய கருப்பர்கள் போராட்டம், அமெரிக்கா முழுவதும் பரவி பின்னர் படிப்படியாக ஓய்வு பெற்று வருகிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனிலும் ஜார்ஜ் பிளாயிட் இனவெறி கொலைக்கு போராட்டம் நடைபெற்றது. சமீபத்தில் ஜார்ஜின் உடல் கருப்பின மக்கள் இசை ஆரவாரங்களுடன் அமைதியான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. காலாகாலமாக ஒடுக்கப்பட்ட கருப்பின மக்களின் குரலாகவே இந்த போராட்டம் நடைபெற்றதாக அமெரிக்க சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


latest tamil news


இந்நிலையில் தற்போது நிறவெறி கொண்ட வெள்ளை இன மக்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பல கருப்பின ஆதரவாளர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ‛10 லட்சம் புத்திசாலி அமெரிக்கர்களில் 10 பேர் இனவாதிகளாக உள்ளனர்' என்ற இணைய பதிவு வைரலானது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் 10 லட்சம் அமெரிக்கர்களில் 10 பேர் இனவாதிகள் என்ற கருப்பின ஆதரவாளர்களின் விமர்சனத்துக்கு டல்லாஸ் கூட்டத்தில் கடுமையான எதிர்ப்பு மற்றும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தின்போது கடைகளை சூறையாடுபவர்களை கொள்ளையர்கள் என முன்னதாக விமர்சித்து இருந்த டிரம்ப், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தால் தான் ராணுவத்தை அழைக்க வேண்டி இருக்குமெனத் தெரிவித்து இருந்தார். இது சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
12-ஜூன்-202023:44:47 IST Report Abuse
தல புராணம் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம். இவன் ஒரு ஆலகால விஷம்.. நம்மூரில் இருக்கும் விஷங்களை நாம் நன்கறிவோம். 3% தான்.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜூன்-202018:57:37 IST Report Abuse
தமிழ்வேல் 10 லட்சத்தில் 10 பேர் என்பது மிகவும் குறைவு. 10 சதவிகிதம் என்று கூறலாம்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
12-ஜூன்-202018:18:37 IST Report Abuse
 Muruga Vel வெள்ளை காரில் கருப்பு டயர்கள் .... தோல்விக்கு பேட் லக் ..சமாதானத்துக்கு வெள்ளை .. செஸ் விளையாட்டில் வெள்ளை முதலில் ஆடும் ... தப்பு செய்தவனை ப்ளேக் லிஸ்ட் செய்வது ..கலியாணத்துக்கு வெள்ளை ஆடையும் சாவுக்கு கருப்பு ஆடையும் அணியும் வரை இந்த இன பேதம் இருக்கும் ... வெள்ளை டிஸ்ஸு பேப்பர்களை கறுப்பர்கள் உபயோகிக்கும் வரை இப்படியே இருக்கும்
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜூன்-202023:40:09 IST Report Abuse
தமிழ்வேல் எனக்கு பாதத்தின் கீழ் வெள்ளை. ஆனால் தலைக்குமேல் கருப்பு....
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
13-ஜூன்-202012:39:16 IST Report Abuse
 Muruga VelIn between air pipe...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X