தாய்லாந்து பெண் தயாரித்த சூப்பர் ஹீரோ கொரோனா ஷீல்டு| Thai entrepreneur's face shields protect against Covid-19 and villains | Dinamalar

தாய்லாந்து பெண் தயாரித்த சூப்பர் ஹீரோ கொரோனா ஷீல்டு

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (1)
Share
பாங்காக்: கொரோனா மாஸ்குடன் முக ஷீல்டுகள் அணிவது அதிக பாதுகாப்பு தரும். சீனா, தாய்லாந்து, வியட்நாம், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் ஷீல்டுகள் பொதுமக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் தாய்லாந்தைச் சேர்ந்த ஓர் பெண்மணி வித்யாசமான முக ஷீல்டுகளைத் தயாரித்து விற்று அதிக லாபம் ஈட்டி வருகிறார்.மாய்சா டாலர்டு (31) என்ற பெண் ஷீல்டுகளில் புதுமை புகுத்தி லாபம்
Thailand, Face Shields, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, coronavirus, Protection, தாய்லாந்து, முக ஷீல்டு, சூப்பர் ஹீரோ, வைரஸ், பாதுகாப்பு

பாங்காக்: கொரோனா மாஸ்குடன் முக ஷீல்டுகள் அணிவது அதிக பாதுகாப்பு தரும். சீனா, தாய்லாந்து, வியட்நாம், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் ஷீல்டுகள் பொதுமக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் தாய்லாந்தைச் சேர்ந்த ஓர் பெண்மணி வித்யாசமான முக ஷீல்டுகளைத் தயாரித்து விற்று அதிக லாபம் ஈட்டி வருகிறார்.

மாய்சா டாலர்டு (31) என்ற பெண் ஷீல்டுகளில் புதுமை புகுத்தி லாபம் ஈட்டி வருகிறார். சிறிய ஸ்டுடியோ அறையில் தயாரிக்கப்படும் இந்த ஷீல்டுகள் குழந்தைகளைக் கவரும் வகையில் சூப்பர் ஹீரோக்கள், பிரபல காமிக்ஸ் கதாபாத்திரங்களின் படங்கள் கொண்டதாக அமைந்துள்ளது. இது தாய்லாந்து குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. டிரான்ஸ்பரண்ட் ஷீல்டுகள் அணிந்து போர் அடித்தவர்கள் ஓர் வித்யாசத்துக்காக இதனை அணிந்து தெருக்களில் உலா வருவதைக் காண முடிகிறது. இதேபோல மாஸ்குளில் விதவிதமான டிசைன்கள், பேட்டன்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


ஸ்டார் வார் கதாபாத்திரங்கள் முதல் ஜப்பானிய சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களான மொபைல் சூட் கண்டம்வரை அனைத்தும் இந்த ஷீல்டுகளில் உள்ளது. தாய்லாந்தில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குழந்தைகள் சமூக இடைவேளையுடன் பள்ளிகளுக்குச் செல்லத் துவங்கி விட்டனர். இந்த வித்யாசமான சூப்பர் ஹீரோ ஷீல்டுகளை அணிந்து சென்று சக நண்பர்களுக்குக் காட்டுவதில் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

தனது சூப்பர் ஹீரோ ஷீல்டுகளை அனைவரும் வாங்கும் வகையில் 180 பாட்டுக்கு (5.77 அமெரிக்க டாலர்) நியாயமான விலைக்கு விற்றுவருகிறார் மாய்சா. பல பிரபல பொம்மை கடைகள் தற்போது மாய்சாவை தங்களுக்கு சூப்பர் ஹீரோ ஷீல்டு செய்துதரச் சொல்லி அணுகி வருகின்றன. பொழுதுபோகாமல் வீட்டில் இருந்து பணம் ஈட்ட மாய்சா துவங்கி தொழில் அவருக்கு பல வாய்ப்புகளைப் பெற்றுத் தந்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X