பொது செய்தி

இந்தியா

பத்ரிநாத் கோவிலில் உள்ளூர் கிராம மக்கள் பிரார்த்தனைக்கு அனுமதி

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பத்ரிநாத் : உத்தரகண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர் கிராம மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் கோவிலில் பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.



latest tamil news



நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டு தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாட்டுகளுடன் கோவில்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற பத்ரிநாத் கோவிலில் பிரார்த்தனை செய்வதற்கு சாமோலி மாவட்டத்தை சுற்றியுள்ள மனா மற்றும் பாம்னி கிராமங்களை சேர்ந்த பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் பக்தர்கள் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சுத்தமாக வைத்து கொள்வது ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இதனால் பக்தர்களும் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். உத்தரகண்ட் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஜூன் 30 வரை கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


latest tamil news



இது தொடர்பாக கிராம பக்தர்களில் சிலர் கூறுகையில், பத்ரி விஷாலை (விஷ்ணு) வழிபட அனுமதி தந்த நிர்வாகத்திற்கு நன்றி. இந்த தொற்று நோயை சமாளிக்கவும் அதிலிருந்து காக்கவும் பத்ரி விஷாலை பிரார்த்திக்கிறோம். இங்குள்ள உள்ளூர் மக்களுக்கு இந்த கோயில் அவர்களின் வீடு போன்றது. இங்கே பிரார்த்தனை செய்த பிறகு நாங்கள் எங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதாக என்று உணர்ந்தோம். இவ்வாறு கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
13-ஜூன்-202000:59:17 IST Report Abuse
தல புராணம் "இன்னுமாப்பா என்னைய நம்புறீங்க".. ன்னு வடிவேலு குரலில் பத்ரி கண்ணீர் விடுறது மனக்கண்ணில் தெரிகிறது.. அவ்வ்வ்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X